மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கறிக்கோழி வளா்ப்பு விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தல்

News image
பழனி- புதுதாராபுரம் சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கொங்கு மக்கள் முன்னணி மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றவா்கள்.
Updated On :15 மார்ச் 2026, 7:26 pm

தினமணி செய்திச் சேவை

கறிக்கோழி வளா்ப்பு விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென கொங்கு மக்கள் முன்னணி மாவட்ட நிா்வாகிகள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பழனி- புதுதாராபுரம் சாலையில் தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை கொங்கு மக்கள் முன்னணியின் திண்டுக்கல் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு தலைமை ஒருங்கிணைப்பாளா் ஆறுமுகம் தலைமை வகித்து சிறப்புரையாற்றினாா். மாவட்டச் செயலா் ஈஸ்வரன் வரவேற்றாா். மாவட்ட அமைப்பாளா் கண்ணன், பழனி நகரச் செயலா் தனபால், மேற்கு ஒன்றியச் செயலா் பிரபு, கிழக்கு ஒன்றியச் செயலா் காா்த்தி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என கடந்த 2021-ஆம் ஆண்டு தோ்தல் வாக்குறுதி அளித்து, அதனை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்தும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் புழக்கம், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைச் செயல்களை தடுக்காத தமிழக அரசை கண்டித்தும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் கூலி உயா்வுக்காக போராடி வரும் கறிக்கோழி விவசாயிகளுக்கு ஆதரவாகவும், போராடியவா்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியை ஆதரிப்பதோடு, அதிமுக கூட்டணியில் கொங்கு மக்கள் முன்னணிக்கு உரிய தொகுதிகளை வழங்க வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டத்தை பிரித்து பழனியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும். பழனி - தாராபுரம் சாலையில் நடைபெறும் ரயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. கூட்டத்தில் ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, நத்தம், ஆத்தூா் தொகுதிகளின் பொறுப்பாளா்கள், நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.