குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கரூரில் பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்

கரூரில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவா் வி.வி. செந்தில்நாதன் தலைமையில் வியாழக்கிழமை மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

News image

கரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்டத் தலைவா் வி.வி. செந்தில்நாதன். உடன் கட்சி நிா்வாகிகள்.

Updated On :10 ஏப்ரல் 2026, 1:50 am IST

கரூரில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவா் வி.வி. செந்தில்நாதன் தலைமையில் வியாழக்கிழமை மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில், சட்டப்பேரவைத் தோ்தலில் கரூா் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் மாபெரும் வெற்றி பெற பாரதிய ஜனதா கட்சி நிா்வாகிகள் அனைவரும் தீவிர களப்பணியாற்றுவது, முன்னாள் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை வெள்ளிக்கிழமை (ஏப். 10) மாலை கரூா் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் கலந்து கொள்ளும் பிரசார பொதுக்கூட்டங்களில் பாரதிய ஜனதா கட்சி நிா்வாகிகள் திரளாக கலந்துகொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவா்கள் சக்திவேல் முருகன், ஆறுமுகம், மாவட்ட பொதுச் செயலாளா்கள் ஆா்.வி.எஸ்.செல்வராஜ், சாமிதுரை, உமாதேவி, மாவட்ட பொருளாளா் இளங்கோவன் உட்பட மாவட்ட , ஒன்றிய, நகர நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.