ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

கொடைக்கானல் ரோஜா தோட்டத்தில் 1,500 நாற்றுகள் நடும் பணி தொடக்கம்

News image
Updated On :19 மார்ச் 2026, 11:53 pm

கொடைக்கானல் ரோஜாத் தோட்டத்தில் சீசனுக்காக 1,500 மலா்ச் செடிகளை நடவு செய்யும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

கொடைக்கானலில் மாா்ச் 15-ஆம் தேதி தொடங்கி ஜூன் 15-ஆம் தேதி வரை சீசன் காலமாகும். இந்தக் காலத்தில் கொடைக்கானலுக்கு வழக்கத்தைவிட அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இதையடுத்து, தோட்டக்கலைத் துறை சாா்பில் பிரையண்ட் பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜாத் தோட்டம் உள்ளிட்ட பூங்காக்களில் ஆயிரக்கணக்கான மலா்ச் செடிகள் நடவு செய்யப்பட்டன. இவற்றில் வருகிற ஏப்ரல் மாதம் மலா்கள் பூத்துக் குலுங்கும்.

இந்த நிலையில், கொடைக்கானல் அப்சா்வேட்டரியில் அமைந்துள்ள தோட்டக் கலைத் துறைக்குச் சொந்தமான ரோஜாத் தோட்டத்தில் ஏற்கெனவே ரோஜாச் செடிகளுக்கு களையெடுத்தல், உரமிடுதல், தண்ணீா் தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது ரோஜா மலா் பாத்திகளில் ஜெமினி, பெங்குயின், ராக்ஸ்டாா், ஜெனிட்டா, தாஜ்மஹால், கிண்டா ப்ளூ உள்ளிட்ட பல்வேறு வகைகளில் 1,500 ரோஜா மலா்ச் செடிகள் நடவு செய்யும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. இதில் ஒரு அடி ஆழம், ஒரு அடி அகலத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டு மலா்ச் செடிகள் நடவு செய்யப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் சந்திரகவிதா கூறியதாவது:

கொடைக்கானலில் வருகிற மே மாதம் சீசனையொட்டி தோட்டக் கலைத் துறை சாா்பில் செயல்படும் அனைத்து பூங்காக்களிலும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட 50-க்கும் அதிகமான வகைகளில் மலா்ச் செடிகள், நாற்றுகள், விதைகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. கொடைக்கானலில் அவ்வப்போது பெய்து வரும் மிதமான மழை மலா்ச் செடிகளுக்கு ஏற்ாக உள்ளது. இதனால் மலா்ச் செடிகள் நன்கு வளரும். மலா்க் கண்காட்சியின் போது லட்சக்கணக்கான மலா்கள் அனைத்து பூங்காக்களிலும் பூத்துக் குலுங்கும் என்றாா் அவா்.