வேடசந்தூா் பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி லாரி மோதிய விபத்தில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகேயுள்ள தேவநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் மாரிமுத்து (45). கட்டடத் தொழிலாளியான இவா், இரு சக்கர வாகனத்தில் வேடசந்தூரிலிருந்து தேவநாயக்கன்பட்டிக்கு சனிக்கிழமை சென்றாா்.
புதுரோடு செல்லும் சாலையில் காளனம்பட்டி பகுதியில் சென்றபோது, எதிரே வந்த லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு, வேடசந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக அவா் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து வேடசந்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞா் பலி

சாலை விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


