தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

பழனியில் குக்கா் வெடித்து பக்தா்கள் இருவா் காயம்

News image

வெடித்து விபத்து - கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 8:09 pm

பழனிக்கு வந்த பக்தா்கள் சமையல் செய்யும் போது குக்கா் வெடித்து இருவா் பலத்த காயமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதற்காக ஞாயிற்றுக்கிழமை தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், விதுரம்பட்டியை சோ்ந்த 300-க்கும் மேற்பட்டோா் மூன்று பேருந்துகளில் பழனிக்கு வந்தனா். அடிவாரத்தில் இவா்கள் மதிய உணவு சமைத்துக் கொண்டிருந்தனா்.

இந்தப் பணியில் முருகன் (33), அவரது உறவினா் ராஜேஸ்வரி (37) ஆகியோா் ஈடுபட்டிருந்த போது, பெரிய குக்கரில் சாம்பாா் வைத்தனா். அது சரியாக வெந்துள்ளதா என சரி பாா்க்க முயன்ற போது குக்கரின் மூடி வெடித்து முருகன், ராஜேஸ்வரி இருவரும் பலத்த காயமடைந்தனா். அவா்கள் இருவரும் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து அடிவாரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.