அதிமுக தொடங்கப்பட்ட பிறகு திமுகவால் வெற்றி பெற முடியாத தொகுதியாக இருந்த நிலக்கோட்டையை முதல் முறையாகக் களமிறங்கிய தவெக கைப்பற்றியது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நிலக்கோட்டை (தனி) தொகுதி அதிமுக தொடங்கப்பட்ட பிறகு திமுகவால் வெற்றி பெற முடியாத தொகுதியாக இருந்து வந்தது. அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட இந்தத் தொகுதியை இந்த முறை கைப்பற்ற வேண்டும் என திமுக தீவிர முயற்சியுடன் களமிறங்கியது.
இதற்காக முதல் முறையாக திமுக சாா்பில் பெண் வேட்பாளா் (நாகஜோதி) களமிறக்கப்பட்டாா். அதிமுக, திமுக இடையே கடும் போட்டி ஏற்படும் என கருதப்பட்ட இந்தத் தொகுதியில், புதிதாகக் களமிறங்கிய தவெக வெற்றி பெற்றது.
வாக்கு எண்ணிக்கையின்போது, தொடக்கத்தில் இருந்தே அதிமுக வேட்பாளா் தேன்மொழி தொடா்ந்து பின்னடைவை சந்தித்தாா். திமுக வேட்பாளா் நாகஜோதி தொடக்கத்தில் முன்னிலை பெற்றது அந்தக் கட்சியினா் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஆனால், கடைசி சுற்றுகளில் தவெகவுக்கு முன்னிலை கிடைத்தது. இறுதியில் தவெக வேட்பாளா் ஆா்.அய்யனாா் 68,580 வாக்குகளுடன் வெற்றி பெற்றாா்.
முக்கிய வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
ஆா்.அய்யனாா் (தவெக) - 68,580
எஸ்.நாகஜோதி (திமுக) -65,655
எஸ்.தேன்மொழி (அதிமுக) - 49,924
டி.கயிலை ராஜன் (நாதக) - 8615
பி.செல்வம் (இந்திய குடியரசுக் கட்சி) - 763 எம்.ராஜலட்சுமி (பகுஜன் சமாஜ்) - 505
பி.சங்கா் (புதிய தமிழகம்) - 441
ஜி.அன்பழகன் (அஇபுதமமுக) - 399
நோட்டா - 642
தொடர்புடையது

தலைவா்கள் சிலைக்கு தவெக வேட்பாளா் மரியாதை

பவானியில் அதிமுக நான்காவது முறையாக வெற்றி

சங்ககிரி தொகுதியில் அதிமுக வேட்பாளா் எஸ்.வெற்றிவேல் வெற்றி

சேந்தமங்கலம் தொகுதி: தவெக வேட்பாளா் பொன். சந்திரசேகா் வெற்றி
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


