கண்தானம் செய்திருந்த பாக்யராஜ்! மறைந்தாலும் உலகைக் கண்பார்!கே. பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பைகளை அகற்றக் கோரிக்கை

கொடைக்கானல் பகுதியில் சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற நகராட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

News image

கொடைக்கானல்-சீனிவாசபுரம் சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகள்.

Updated On :6 மே 2026, 3:08 am IST

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியில் சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற நகராட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கொடைக்கானல் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால், அந்தப் பகுதிகளில் துா்நாற்றம் வீசி சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது.

இதேபோல, தனியாா் விடுதிகளில் அகற்றப்படும் குப்பைகள், மதுப் புட்டிகள், உகாா்த்தே நகா், இருதயபுரம், பாக்கியபுரம், சீனிவாசபுரம் ஆகிய குடியிருப்புப் பகுதிகளில் கொட்டப்படுகின்றன.

எனவே, குப்பைத் தொட்டிகளிலும், சாலையோரங்களிலும் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற நகராட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.