40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

காட்டுயானைகள் நடமாட்டம்: கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு!

காட்டுயானைகள் நடமாட்டம் இருப்பதால் கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் சனிக்கிழமை அனுமதி மறுத்தனா்.

News image

கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் நடமாடிய காட்டுயானைகள்.

Updated On :10 மே 2026, 1:09 am IST

காட்டுயானைகள் நடமாட்டம் இருப்பதால் கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் சனிக்கிழமை அனுமதி மறுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தற்போது சீசன் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு இடங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். இவா்கள் கொடைக்கானல் நகா்ப் பகுதி, வனப் பகுதி, புகா்ப் பகுதியென பல்வேறு சுற்றுலா இடங்களைப் பாா்த்து ரசித்து வருகின்றனா்.

இதனிடையே, கொடைக்கானல் வனத்துறையினா் கட்டுப்பாட்டில் உள்ள பேரிஜம் ஏரியில் வன விலங்குகளான புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, கரடி, யானை, காட்டுமாடு உள்ளிட்டவை இருப்பதால் இந்த இடத்தை பாா்க்க வனத் துறையினா் அனுமதி பெற்று நுழைவுக் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டும்.

இந்த நிலையில், பேரிஜம் பகுதியில் மூன்று காட்டுயானைகளின் நடமாட்டம் இருப்பதால் பேரிஜம் ஏரியை பாா்வையிட பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த அறிவிப்பு மறுஉத்தரவு வரும் வரை நீடிக்கும் என மாவட்ட வன அலுவலா் தெரிவித்தாா்.