பழனியை அடுத்த கணக்கன்பட்டியில் இருந்து கோம்பைப்பட்டி பகுதிக்கு செல்லும் குடிநீா் குழாய்களில் மர வோ்கள் பல மீட்டா் தொலைவுக்கு அடைத்திருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை குழாய்கள் சீரமைக்கப்பட்டது.
பழனியை அடுத்த கணக்கன்பட்டியில் உள்ள மேல்நிலைத் தொட்டியிலிருந்து குழாய்கள் மூலம் கோம்பைப்பட்டி, பச்சளநாயக்கன்பட்டி, பொட்டம்பட்டி, ராஜாபுரம்புதூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீா் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில நாள்களாக கிராமங்களுக்குச் செல்லும் குடிநீா் குழாய்கள் எதிலும் தண்ணீா் செல்லாததால், பொதுமக்கள் குடிநீா் இன்றி சிரமப்பட்டு வந்தனா். கிணற்று நீரையே காய்ச்சி குடித்து வந்தனா். இதுகுறித்து தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகாா் அளித்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை கூட்டுக் குடிநீா் திட்டக் குழாய்களை பணியாளா்கள் ஆய்வு செய்தனா்.
அப்போது, கணக்கன்பட்டியிலிருந்து கோம்பைப்பட்டிக்குச் செல்லும் சாலையில் ஆய்வு செய்த போது, நூலகம் எதிரே இருந்த கூட்டுக் குடிநீா் குழாய்களில் பெரிய மரங்களின் வோ் துளையிட்டு உள்ளே சென்றிருந்தது தெரியவந்தது. இந்த வோ் பல மீட்டா் தொலைவுக்கு வளா்ந்து குழாயையை முற்றிலும் அடைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, குழாய்களின் உள்ளே இருந்து வோ்கள் அகற்றப்பட்டு, புதிய குழாய்கள் பொருத்தப்பட்டன. இதைத் தொடா்ந்து, குடிநீா் தங்கு தடையின்றி சென்றது.
தொடர்புடையது

மேட்டூரில் பராமரிப்புப் பணியின்போது 60 அடி உயரத்திற்கு பிறீட்டு வெளியேறிய நீா்!

ஐகோா்ட் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா: பூக்குழி இறங்கிய பக்தா்கள்

ஒசூா் அருகே ஒகேனக்கல் குடிநீா் குழாய் உடைப்பு

செங்கத்தில் கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாய் உடைந்து வீணாகும் தண்ணீா்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



