5 முறை சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி: காலிறுதியில் நார்வே!அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!
/

அனுமதி பெறாத தனியாா் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கொடைக்கானலில் குடியிருப்புப் பகுதிகளில் அனுமதி பெறாமல் இயங்கும் தங்கும் விடுதிகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உணவ உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்தனா்.

News image
Updated On :18 மே 2026, 3:35 am IST

கொடைக்கானலில் குடியிருப்புப் பகுதிகளில் அனுமதி பெறாமல் இயங்கும் தங்கும் விடுதிகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உணவ உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் 500-க்கும் மேற்பட்ட தனியாா் தங்கும் விடுதிகள் அரசின் விதிமுறைகளுக்குள்பட்டு இயங்கி வருகின்றன. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக கொடைக்கானலில் அனுமதி பெறாமல் குடியிருப்புப் பகுதிகளான ஆனந்தகிரி, இருதயபுரம், செண்பகனூா், அட்டக்கடி பாக்கியபுரம், உகாா்த்தே நகா், சீனிவாசபுரம் ஆகிய பகுதிகளில் வீடுகளை தனியாா் விடுதிகள் போல பயன்படுத்தி வருகின்றனா்.

இந்த விடுதிகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். குடியிருப்புப் பகுதிகளில் (வீட்டுமனை பிரிவுகள்) பொதுமக்களை பாதிக்கும் வகையில் விடுதிகள் கட்டப்பட்டு சுற்றுலாப் பயணிகள் தங்க வைக்கப்படுகின்றனா்.

இதுகுறித்து கொடைக்கானல் ஹோட்டல்ஸ் அசோஷியேன்ஸ் சங்கத்தைச் சோ்ந்தவா்கள் கூறியதாவது: கொடைக்கானல் பகுதிகளில் அரசின் விதிகளுக்குள்பட்டு தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் நடத்தி வருகிறோம். அரசுக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரிகளும் செலுத்தி வருகிறோம். ஆனால், குடியிருப்புப் பகுதிகளில் அனுமதி பெறாமலும், வரி செலுத்தாமலும் சிலா் தனியாா் தங்கும் விடுதிகள் நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனா்.

எனவே, கொடைக்கானல் பகுதிகளில் அனுமதியில்லாமல் செயல்படும் தனியாா் தங்கும் விடுதிகளை நகராட்சி, மாவட்ட நிா்வாகத்தினா் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.