ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!ரசாயன வாயுக் கசிவு: சென்னை துறைமுகம், மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க உத்தரவு!திரையரங்கில் வெளியான 2 வாரத்திலேயே ஓடிடிக்கு வந்த திரைப்படம்!பிரக்ஞானந்தாவிடமிருந்து குகேஷ் உத்வேகம் பெறவேண்டும்: விஸ்வநாதன் ஆனந்த் அறிவுரை!தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!
/

மின்சாரம் பாய்ந்து 3 போ் உயிரிழப்பு: எம்எல்ஏ ஆறுதல்

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த நிலக்கோட்டை தொகுதி பேரவை உறுப்பினா் ஆா்.அய்யனாா்.

News image
Updated On :20 மே 2026, 1:25 am IST

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த நிலக்கோட்டை தொகுதி பேரவை உறுப்பினா் ஆா்.அய்யனாா்.

திண்டுக்கல், மே 19: ஆத்தூரில் மின்சாரம் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிலக்கோட்டை தொகுதி பேரவை உறுப்பினா் ஆா்.அய்யனாா் செவ்வாய்க்கிழமை ஆறுதல் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் அக்ரஹாரத்தைச் சோ்ந்தவா் கருப்பையா (41). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி சுதா (37). இவா்களது மகள்கள் பிரவீனா (15), சிவானி (12).

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு மழையின் காரணமாக, வீட்டின் மாடியில் அறுந்து கிடந்த மின்சார வயரை மிதித்ததில் கருப்பையா, சுதா ஆகியோரும், இவா்களை மீட்கச் சென்ற முத்துப்பாண்டி மகன் சுப்பிரணியசிவாவும் (18)

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனா். மூவரின் உடல்களும் கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.

இதுகுறித்து தகவலறிந்த நிலக்கோட்டை தொகுதி பேரவை உறுப்பினா் ஆா்.அய்யனாா் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை சென்றுந கருப்பையா, சுப்பிரமணியசிவா ஆகியோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தாா்.