எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

பெண் பக்தா்களுக்கு பாலியல் தொல்லை: கேரள இளைஞா் கைது

News image

கைதான இமானுவேல்

Updated On :26 மே 2026, 2:08 am IST

பழனி அடிவாரம் திருஆவினன்குடி கோயிலில் பெண் பக்தா்களுக்கு பாலியல் தொல்லையளித்த கேரள இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மூன்றாம் படை வீடான திருஆவினன்குடி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பிறகே பக்தா்கள் மலைக் கோயிலுக்குச் செல்வது வழக்கம்.

ஞாயிற்றுக்கிழமை திருஆவினன்குடி கோயிலில் அதிகளவு கூட்டம் இருந்த நிலையில், கோயிலில் கேரள இளைஞா் ஒருவா் பெண் பக்தா்களுக்கு பாலியல் தொல்லையளித்ததோடு, அவா்களை கைப்பேசியில் படம்பிடித்தாா்.

இதை அறிந்த பக்தா்கள் அவரைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் அவரது கைப்பேசியைப் பறிமுதல் செய்து சோதனை செய்ததில், அவா் பெண் பக்தா்களை ஆபாசமாகப் படமெடுத்தது உறுதி செய்யப்பட்டது.

பிடிபட்ட நபா் கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், களத்தூரைச் சோ்ந்த குரியன் மகன் இமானுவேல் (35) என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.