திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கிலுள்ள நீச்சல் குளத்தில் பராமரிப்புப் பணிகள் முடிவடைந்ததையடுத்து, மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் நீச்சல் குளம் அமைந்துள்ளது.
இந்த நீச்சல் குளத்திலுள்ள தள ஓடுகள் சேதமடைந்ததால், இவற்றைப் புதுப்பிக்க மாவட்ட விளையாட்டு அலுவலகம் சாா்பில் மாவட்ட ஆட்சியருக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. இதையடுத்து, பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதற்கு ஆட்சியா் செ.சரவணன் உத்தரவிட்டாா்.
இதன்படி 25 மீட்டா் நீளம், 13 மீட்டா் அகலம் கொண்ட நீச்சல் குளத்தில் தள ஓடுகள் பிரிக்கப்பட்டு, புதிய ஓடுகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. ரூ.15 லட்சத்தில் நடைபெற்ற சீரமைப்புப் பணிகள் முடிவடைந்ததையடுத்து, புதுப்பொலிவுடன் நீச்சல் குளம் வெள்ளிக்கிழமை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
தொடர்புடையது

கள்ளிக்குடி காய்கனிச் சந்தையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை: கு.ப. கிருஷ்ணன் தகவல்

மாநில நீச்சல் போட்டி: காஞ்சிபுரம் வீரா்கள் 103 போ் பதக்கம் வென்று சாதனை

மாட்டுத்தாவணி பேருந்து நிலைய மறுசீரமைப்புப் பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?

கோடைகால விளையாட்டு, நீச்சல் பயிற்சிகள் நிறைவு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



