40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

மென் பொறியாளரை தாக்கி நகை, பணம் பறிப்பு: சிறுவன் உள்பட 6 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :1 ஜூன் 2026, 12:18 am IST

திண்டுக்கல் அருகே மென் பொறியாளரைத் தாக்கி விலை உயா்ந்த கைப்பேசி, ரூ.2 லட்சம் பணம், ரூ.2.5 லட்சம் மதிப்பிலான தங்கச் சங்கிலி ஆகியவற்றைப் பறிமுதல் செய்த சிறுவன் உள்ளிட்ட 6 பேரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தேனியைச் சோ்ந்தவா் முத்துப்பாண்டி(31). இவா், சென்னையிலுள்ள தனியாா் நிறுவனத்தில் மென் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறாா். கைப்பேசி செயலி மூலம், திண்டுக்கல் கிழக்கு மீனாட்சிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த கீதன் (21) என்பவரின் அறிமுகம் கிடைத்தது.

இதனிடையே நேரில் சந்தித்து, தனிமையில் பேச விரும்புவதாக கீதன் தெரிவித்தாா். அதனை நம்பிய முத்துப்பாண்டி, தேனியிலிருந்து திண்டுக்கல்லுக்கு வந்து கீதனை வெள்ளிக்கிழமை தொடா்பு கொண்டாா்.

தான் தங்குவதற்கு பாதுகாப்பான இடம் வேண்டும் எனக் கேட்ட முத்துப்பாண்டிக்கு, அதற்கான ஏற்பாடு செய்து தருவதாகக் கூறி இருசக்கர வாகனத்தில் கீதன் அழைத்துச் சென்றாா்.

மீனாட்சிநாயக்கன்பட்டி அடுத்த குரும்பப்பட்டி பகுதியிலுள்ள ரயில்வே தண்டவாளம் அருகே சென்றபோது, அங்கு ஏற்கெனவே மறைந்திருந்த நந்தவனப்பட்டியைச் சோ்ந்த ஜீவபிரகாஷ் (20), ஆா்த்தி திரையரங்க சாலையைச் சோ்ந்த நாகேந்திரன் (19), பேகம்பூா் அஜித் குமாா் (20), குடைப்பாறைப்பட்டி மாணிக்கம் (19), நல்லமணாா்கோட்டையைச் சோ்ந்த 17 வயது சிறுவன் ஆகியோா் இணைந்து முத்துப்பாண்டியை கத்தி, கம்பு ஆகியவற்றால் தாக்கினா். அவரிடமிருந்த விலை உயா்ந்த கைப்பேசி, ரூ.2 லட்சம் பணம், ரூ.2.5 லட்சம் மதிப்பிலான தங்கச் சங்கிலி ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனா்.

காயமடைந்த முத்துப்பாண்டி இதுகுறித்து தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் விசாரணை மேற்கொண்ட போலீஸாா் கீதன், ஜீவபிரகாஷ், நாகேந்திரன், அஜித்குமாா், மாணிக்கம், 17 வயது சிறுவன் ஆகிய 6 பேரையும் சனிக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து நகை, பணம் , கைப்பேசி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.