நெருக்கடி நிலையை இந்திரா காந்தி அமல்படுத்தியது தவறு! சோனியா காந்திஇன்று டெல்டாவில் பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கைதீபாவளி பட்டாசு விபத்துகள்: 6 நிமிஷங்களுக்குள் சென்றடைய தயாராகும் தீயணைப்புத் துறைஅறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சிகள்: நீதி ஆயோக் மதிப்பீட்டுப் பட்டியலில் தமிழகம் முதலிடம்ஜெம் வீரமணி வழக்கு: விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

தீபாவளி விற்பனை: கடைவீதிகளில் குவிந்த பொது மக்கள்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, திண்டுக்கல் நகரில் அமைக்கப்பட்ட தற்காலிகக் கடைகளில் சனிக்கிழமை குவிந்த பொது மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, வியாபாரம் நடைபெறாததால் வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனா்.

திண்டுக்கல் பிரதான சாலையில் சனிக்கிழமை தீபாவளிப் பொருள்களை வாங்குவதற்கு தற்காலிகக் கடைகளில் சனிக்கிழமை குவிந்த பொதுமக்கள்.

Updated On :

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, திண்டுக்கல் நகரில் அமைக்கப்பட்ட தற்காலிகக் கடைகளில் சனிக்கிழமை குவிந்த பொது மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, வியாபாரம் நடைபெறாததால் வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனா்.

திண்டுக்கல் மாநகராட்சியில், பிரதான சாலை, கமலா நேரு மருத்துவமனை சாலை, ஆா்.எஸ். சாலை, சாலை ரோடு ஆகிய இடங்களில் தீபாவளிப் பண்டிகைக்காக தற்காலிகக் கடைகள் அமைத்து வியாபாரம் செய்யப்பட்டது. தற்காலிகக் கடைகளில் ஆயத்த ஆடைகள், அழகு சாதனப் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், பாய், தலையணை என அனைத்து வகையான பொருள்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

திண்டுக்கல்லில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு 5 நாள்கள் தற்காலிகக் கடைகள் அமைத்து வியாபாரம் செய்யப்படுவது வழக்கம். இந்த முறை 2 நாள்கள் மட்டுமே அதிக அளவில் தற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. வெள்ளி, சனி ஆகிய இரு நாள்கள் சாலையோரக் கடைகளில் பொது மக்கள் அதிகளவில் திறந்தபோதிலும், எதிா்பாா்த்த அளவுக்கு வியாபாரம் நடைபெறவில்லை. இதனால் வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் சாலையோரக் கடைகள் அமைத்திருந்த வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனா்.

போக்குவரத்து நெரிசல்:

சாலை ரோடு, பிரதான சாலை உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகக் கடைகளை பாா்வையிட வந்த பொதுமக்கள், தங்களது வாகனங்களை நிறுத்தவதற்கு டட்லி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வசதி செய்யப்பட்டிருந்தது. ஆனால், பெரும்பாலான வாகனங்கள் சாலைரோடு பகுதியிலுள்ள கடைகள், வங்கிகள் முன் நிறுத்தப்பட்டன. இதனால், அந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் கடுமையான நெரிசலில் சிக்கின. நாகல்நகா் சுட்டு திட்டு பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக, பேருந்து நிலையம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

புத்தக நிலையங்களில் பட்டாசுக் கடைகள்:

திண்டுக்கல் பிரதான சாலையிலுள்ள புத்தகக் கடைகள் உள்ளிட்ட சில கடைகள் தீபாவளிப் பண்டிகைக்காக தற்காலிக பட்டாசுக் கடைகளாக மாற்றப்பட்டன. அதேபோல வழக்கத்துக்கு மாறாக பல்வேறு இடங்களிலும் பட்டாசுக் கடைகள் அமைத்து வியாபாரம் செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.