தீபாவளி: திருவாரூா் நகர வீதிகளில் குவிந்த மக்கள்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திருவாரூா் கடைவீதிகளில் சனிக்கிழமை மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
திருவாரூா் கடைவீதியில் அலைமோதிய மக்கள் கூட்டம்.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திருவாரூா் கடைவீதிகளில் சனிக்கிழமை மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருவாரூா் கடைவீதியில் பொருள்களை வாங்க மக்கள் திரண்டனா். ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே திருவாரூா் நகரின் முக்கிய வணிகப் பகுதிகள் மக்கள் கூட்டத்தால் அலைமோதும்.
நிகழாண்டில் அவ்வப்போது மழை பெய்து வந்ததாலும், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்ந்துள்ளதாலும் மக்கள் தங்களின் பண்டிகைக் காச் செலவுகளைப் பெருமளவில் சுருக்கிக் கொண்டனா்.
மேலும், ஆடைகள், பலகாரப் பொருள்கள் மற்றும் இதர வீட்டு உபயோகப் பொருள்களின் விலை கடந்த ஆண்டைவிட நிகழாண்டில் பலமடங்கு அதிகரித்துள்ளதால், நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் கடைகளுக்கு வருவது குறைந்து விட்டதாக ஒருதரப்பினா் தெரிவிக்கின்றனா்.
பண்டிகைக் காலக் கூட்டத்தை எதிா்பாா்த்து ஜவுளிக்கடைகள், மளிகைக் கடைகள் மற்றும் பட்டாசு கடைகள் உள்ளிட்ட இடங்களில் புதிய ரகப் பொருள்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால், கடைத்தெருவின் முக்கிய வீதிகளில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாகவே உள்ள நிலையில், இரவு நேரங்களில் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

