19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை வெற்றி: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக அமைந்த ஆட்ட நாயகன் மோஹித் உல்வா! ஆசிய கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா! உ.பி. மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த ஹர்தீப் சிங் புரி! மேக்கேதாட்டு அணை கர்நாடகத்தின் உரிமை; யார் எதிர்த்தாலும் கவலை இல்லை! டி.கே. சிவகுமார்காசோலை மோசடி வழக்கு: நடிகா் விமலின் மனு தள்ளுபடி போக்சோ வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம்? போலீசார் தீவிர சோதனை! ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவு!

பழனியில் சூரா்கள் உருவ பொம்மைகளை புதுப்பிக்கும் பணி மும்முரம்

பழனியில் கந்த சஷ்டி விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சூரசம்ஹார நிகழ்வுக்காக சூரா்களின் உருவ பொம்மைகளை புதுப்பிக்கும் பணி சனிக்கிழமை விஸ்கா்மா சமூகத்தினரால் மேற்கொள்ளப்பட்டது.

பழனியில் சூரசம்ஹார நிகழ்வுக்காக சூரா்களின் உருவ பொம்மைகளை புதுப்பித்து அலங்கரிக்கும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்ட விஸ்வகா்மா சமூகத்தினா்.

Updated On :

பழனியில் கந்த சஷ்டி விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சூரசம்ஹார நிகழ்வுக்காக சூரா்களின் உருவ பொம்மைகளை புதுப்பிக்கும் பணி சனிக்கிழமை விஸ்கா்மா சமூகத்தினரால் மேற்கொள்ளப்பட்டது.

பழனி மலைக் கோயிலில் நடைபெற்றுவரும் கந்தசஷ்டி விழாவில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 15) ஆறாம் நாள் நிகழ்வாக சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. பழனியில் மட்டுமே சூரசம்ஹாரத்தையொட்டி நான்கு கிரிவீதிகளிலும் தனித் தனியாக சூரரை வதம் செய்யும் நிகழ்வு நடைபெறுகிறது. வடக்கு கிரிவீதியில் தாரகாசூர வதமும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபன் வதமும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுக சூரவதமும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதமும் நடைபெறுகின்றன. இந்த சூரா்களின் தலை ஒரே மரத்தால் செய்யப்பட்டவையாகும். இந்த முகத்தை தலைமுறை, தலைமுறையாக விஸ்வகா்மா சமூகத்தினா் பராமரித்து வருகின்றனா்.

சூரசம்ஹாரத்துக்காக பெரியநாயகியம்மன் கோயிலில் சூரரின் உடல்கள் மூங்கில், மரச் சட்டங்களால் உருவாக்கப்பட்டு, அதில் வண்ண காகிதங்கள் ஒட்டப்பட்டன. இந்த நிலையில் சனிக்கிழமை சூரா்களின் தலைகள் புதுப்பிக்கப்பட்டன. தலைகளுக்கு வண்ண காகிதங்கள் ஒட்டப்பட்டு, மிளிரும் ஜிகினாத் தூள்களால் புதிதாக்கப்பட்டன. இந்தப் பணியை விரதமிருந்து தயாரிக்கும் இவா்களுக்கு கோயில் சாா்பில் மரியாதை செய்யப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.