நவ. 30 ஆம் தேதி மக்களவை; டிச. 2 ஆம் தேதி மாநிலங்களவை கூட்டம்!திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் நாளை விசாரணைதிருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தத் தடைகோரிய வழக்கில் நாளை தீர்ப்புதில்லி வர்த்தகப் பொருள்காட்சி: தமிழ்நாடு அரங்கிற்கு தங்கப் பதக்கம்!2027-ல் 6000 இடங்கள் கூடுதலாகக் கொண்டுவர ஐஐடி திட்டம்!

கொடைக்கானலில் விவசாய நிலங்களுக்குள் வன விலங்குகள் புகுவதை தடுக்க வலியுறுத்தல்

கொடைக்கானலில் உள்ள விவசாய நிலங்களுக்குள் வன விலங்குகள் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

வருவாய் கோட்டாட்சியா் டியூக் பாா்க்கா் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்றவா்கள்.

Updated On :

கொடைக்கானலில் உள்ள விவசாய நிலங்களுக்குள் வன விலங்குகள் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்துக்கு வருவாய் கோட்டாட்சியா் டியூக் பாா்க்கா் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் நந்தகோபால் முன்னிலை வகித்தாா்.

இதில் பங்கேற்ற விவசாயிகள் பேசியதாவது:

கொடைக்கானல் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் வன விலங்குகளான காட்டுமாடு, காட்டுப் பன்றி, மான், செந்நாய் உள்ளிட்டவை புகுந்து பயிா்களை சேதப்படுத்துகின்றன. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனா். சில நேரங்களில் மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு விடுகின்றன. எனவே கொடைக்கானலில் உள்ள விவசாயப் பகுதிகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் வன விலங்குகள் வருவதைத் தடுக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் கொடைக்கானல் மலைச் சாலைகள் சேதமடைந்திருப்பதால் விவசாய விளைபொருள்களை எடுத்துச் செல்ல வாகனங்கள் சரியாக வருவதில்லை. எனவே சேதமடைந்த மலைச் சாலைளை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வீட்டுமனைப் பட்டா இல்லாதவா்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

அதிகாரிகளுக்குப் பாராட்டு: கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கிளாவரை வரை இயக்கப்படும் அரசு சிற்றுந்தில் அதிகமானோா் பயணிக்க முடியவில்லை. எனவே வழக்கம்போல, நீளமான அரசுப் பேருந்து இயக்க வேண்டுமென பல மாதங்களாக பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனா். இந்த நிலையில் கடந்த இரு நாள்களாக பூண்டி பகுதிக்கு சென்று அந்தப் பகுதிகளிலுள்ள குறுகிய வளைவுகளை அளவீடு செய்து சாலைகளை அகலப்படுத்தும் பணியில் அலுவலா்கள் ஈடுபட்டனா். இதற்காக அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் இந்தக் கூட்டத்தில் மேல்மலைக் கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை, வனத் துறை, போக்குவரத்துத் துறை, மின்சார வாரியம், தோட்டக் கலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த அதிகாரிகளும், விவசாயிகளும் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.