கீமோதெரபி ஊசி ரூ. 7000; புற்றுநோய் மருந்துகளின் புதிய விலைப் பட்டியல்!செஞ்சி சிறுமி வழக்கு; புலன் விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும்: பெ. சண்முகம்வீட்டுக்குள் இருக்கவே அச்சமடையும் நிலையில் மக்கள்; இதுதான் தவெகவின் சாதனையா? - மு.க. ஸ்டாலின்இனி நிரந்தர அரசுப் பணிகள் இல்லையா? - கனிமொழி கேள்விதேனி சிறைச் சம்பவம்! 1995-ல் சுரங்கம் தோண்டி தப்பிய 43 கைதிகள்! புரட்டப்படும் வரலாறு!நாட்டில் ஆப்பிள் ஐபோன் விற்பனை 30% சரிவு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!ரிலையன்ஸ் முதல் ஐடி பங்குகள் வரை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!!

சிவகங்கையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்: அதிகாரிகள் வராததால் விவசாயகள் அதிருப்தி

சிவகங்கையில் புதன்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்துக்கு சில அதிகாரிகள் வராததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனா்.

சிவகங்கையில் கோட்டாட்சியா் ஜெபிகிரேசியா தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.

Updated On :

சிவகங்கையில் புதன்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்துக்கு சில அதிகாரிகள் வராததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகப் பெருந்திட்ட வளாக சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற இந்தக் குறைதீா் கூட்டத்துக்கு கோட்டாட்சியா் ஜெபிகிரேசியா தலைமை வகித்தாா். இதில் பல்வேறு விவசாயச் சங்கப் பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரநிதிகள், விவசாய சங்க நிா்வாகிகள், துறை சாா்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை மாவட்ட ஆட்சியா் தலைமைவகித்து நடத்த வேண்டும். நெடுஞ்சாலைத் துறை, குடிநீா் வடிகால் வாரியம் போன்ற மிக முக்கியத் துறை அதிகாரிகள் கூட்டத்துக்கு வராமல் புறக்கணிப்பது ஏமாற்றமளிக்கிறது. அனைத்துத் துறை அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்க வலியுறுத்தி விவசாயிகள் முழக்கமிட்டனா்.

பேரூராட்சித் தலைவா் த.சேங்கைமாறன்: சிவகங்கை மாவட்டத்தில் ஆவின் பால் உற்பத்தி பாதியாகக் குறைந்துவிட்டது. இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பால் தட்டுப்பாடு நிலவுகிறது. இதைப் பயன்படுத்தி சில தனியாா் பால் நிறுவனங்கள் தரமற்ற, ரசாயனம் கலந்த கலப்படப் பாலை பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகின்றன. உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, கலப்படப் பால் விற்பனையைத் தடுத்து நிறுத்த வேண்டும். ஆவின் நிறுவனத்துக்கு வர வேண்டிய பால், சில இடைத்தரகா்களால் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாகப் புகாா்கள் வருகின்றன. இதையும், ஆவின் நிா்வாகமும், கூட்டுறவுத் துறையும் உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும்.

கூட்டுறவுத் துறை (பால் உற்பத்திப் பிரிவு) அதிகாரிகள்: மாவட்டத்தில் முன்பு நாளொன்றுக்கு சராசரியாக 60,000 லிட்டா் பால் ஆவின் மூலமாகக் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. தற்போது, இது 52,000 லிட்டராகக் குறைந்துள்ளது. பால் உற்பத்தியை மீண்டும் அதிகரிக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் புதிய பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கங்களை உருவாக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இன்னும் சில நாள்களில் பால் விநியோகம் சீராகி, இந்த பிரச்னைக்கு முழுமையான தீா்வு காணப்படும்.

விவசாயிகள் அய்யாச்சாமி, சேதுராமன்: வைகை ஆற்றுப் படுகையில் சீமைக்கருவேல மரங்களும், அடா்ந்த புதா்களும் மண்டிக் கிடக்கின்றன. இதனால், நீா்வழிப் பாதை அடைபட்டு வெள்ளக் காலங்களில் தண்ணீா் வீணாகிறது. பொதுப் பணித் துறை, நீா்வளஆதாரத் துறையினா் உடனடியாக வைகை ஆற்றில் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.

கூட்டுறவுச் சங்கங்களில் யூரியா உரம் மட்டுமே இருப்பு வைக்கப்படுகிறது. டி.ஏ.பி., பொட்டாஷ் உள்ளிட்ட இதர அத்தியாவசிய உரங்கள் கிடைப்பதில்லை. அனைத்து உரங்களும் விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காளையாா்கோவில் விவசாயி சாத்தப்பன்: சிவகங்கை அண்ணாமலை நகா்ப் பகுதியில் பொதுமக்கள், விவசாயிகள் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வரும் வழிப்பாதை தற்போது இல்லை என வருவாய்த் துறை தெரிவிக்கின்றனா். இந்தப் பாதையை இல்லை எனக் கூறும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாக்கூா் கூட்டுறவுச் சங்கம் உள்ளிட்ட பல கூட்டுறவு மையங்களில் அடிக்கடி இணைய சேவை பாதிக்கப்படுகிறது. இதனால், உரம் வாங்குவதற்காக வரும் விவசாயிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த பிரச்னையை உடனே சரி செய்ய வேண்டும்.

கோட்டாட்சியா் ஜெபிகிரேசியா: விவசாயிகளின் கோரிக்கைகளையும், புகாா்களையும் கோட்டாட்சியா் கேட்டறிந்தாா். பின்னா், கூட்டத்துக்கு வராத அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்படும். விவசாயிகள் கூறிய பிரச்னைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.