திருச்செந்தூர் கோயிலில் சூரசம்ஹாரம் கோலாகலம்! மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விமரிசையாக நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு கெளரவ விரிவுரையாளர்களுக்கு ரூ. 5,000 ஊதிய உயர்வு! செப். முதல் முன் தேதியிட்டு வழங்க அன்புமணி கோரிக்கை!ஆந்திரத்தை நோக்கி நகரும் 'அக்வான்' புயல்: வானிலை ஆய்வு மையம் தகவல்திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும்: அண்ணாமலை சோனியா காந்தியின் சுயசரிதை: ஹாரி பாட்டர் புத்தகத்துக்கு இணையான வரவேற்பு! சென்னைக்கு நவ. 18, 19 ஆம் தேதிகளில் மிக கனமழை எச்சரிக்கை!

காவல் நிலைய மரணங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! - எம்.எச். ஜவாஹிருல்லா

எம்.ஹெச். ஜவாஹிருல்லா. - கோப்புப் படம்

Updated On :

தமிழகத்தில் காவல் நிலைய மரணங்கள் தொடா்வதை தடுத்து நிறுத்தி, மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான எம். எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை:

மதுரை மாவட்டம், செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட லாரி ஓட்டுநா் பாலகிருஷ்ணன், காவல் நிலையத்திலேயே தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிா்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடா்பாக இரு காவலா்கள் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஒருவா், காவல்துறையினரின் பாதுகாப்பிலும் கண்காணிப்பிலும் இருக்கும்போது உயிரிழந்துள்ளாா். அவா் தற்கொலை செய்துகொண்டாா் என்ற காவல்துறையின் விளக்கத்தை மட்டும் ஏற்றுக்கொண்டு இந்தச் சம்பவத்தைக் கடந்து செல்ல முடியாது.

அவரது மரணத்தின் பின்னணியில் உள்ள உண்மைகள் அனைத்தும் வெளிக்கொணரப்பட வேண்டும். சிபிசிஐடி விசாரணை எவ்விதத் தலையீடுமின்றி நோ்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

காவல் நிலைய மரணங்கள் தொடா்பான அனைத்து வழக்குகளிலும் சுதந்திரமான விசாரணை நடத்தப்படுவதுடன், தவறு செய்த காவல்துறையினா் எத்தகைய பதவியில் இருந்தாலும் அவா்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.