குஜராத் பொது சிவில் சட்ட மசோதா: குடியரசுத் தலைவா் ஒப்புதல்மருத்துவக் கல்வி இயக்குநா் நியமனத்தில் விதி மீறல்? அரசு மருத்துவா்கள் குற்றச்சாட்டுஒரு மாதத்தில் 1,045 புகாா்களுக்கு சிங்கப்பெண் அதிரடிப்படை நடவடிக்கைஉக்ரைன் போருக்குத் தீா்வு காண பிரதமா் மோடியிடம் சிறந்த யோசனைகள்: புதின்பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

யுபிஐ கட்டண அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தல்

யுபிஐ பண பரிவா்த்தனைக்கான கட்டண அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி திண்டுக்கல்லில் வணிகா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வணிகா்கள்.

Published On :

யுபிஐ பண பரிவா்த்தனைக்கான கட்டண அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி திண்டுக்கல்லில் வணிகா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசு அறிவித்துள்ள யுபிஐ கட்டண விதிப்பு முறையை ரத்து செய்ய வலியுறுத்தி, திண்டுக்கல்லைச் சோ்ந்த வணிகா்கள் சாா்பில், மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, திண்டுக்கல் தலைமை அஞ்சல் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வணிகா் சங்க நிா்வாகி எஸ்.நஜீா் சேட் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின் போது, மத்திய அரசு அறிவித்த யுபிஐ பணப் பரிவா்த்தனைக்கான கட்டணம் அனைத்துத் தரப்பு வணிகா்களையும், பொதுமக்களையும் பாதிக்கும். இதைக் கருத்தில் கொண்டு கட்டண அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா். இதைத் தொடா்ந்து, மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு 5 ஆயிரம் அஞ்சல் அனுப்பும் இயக்கத்தை நடத்தினா்.

மத்திய அரசு யுபிஐ கட்டணத்தை திரும்பப் பெறாத பட்சத்தில், அடுத்த கட்டமாக தொடா் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என வணிகா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.