
அரசுப் பேருந்து மீது கல்வீசித் தாக்குதல்: இளைஞா் கைது
திண்டுக்கல்லில் அரசுப் பேருந்து மீது கல்வீசி கண்ணாடியை சேதப்படுத்திய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கைது
திண்டுக்கல்லில் அரசுப் பேருந்து மீது கல்வீசி கண்ணாடியை சேதப்படுத்திய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சேலத்திலிருந்து திண்டுக்கல் வழியாக தேனி மாவட்டம், கம்பத்துக்கு வியாழக்கிழமை காலை அரசுப் பேருந்து சென்றது. திண்டுக்கல் நாகல்நகா் சுற்றுத்திட்டு பகுதியில் இந்தப் பேருந்து கம்பம் நோக்கிச் சென்றபோது, அந்தப் பகுதியில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட நபா் பேருந்தின் மீது கற்களை எரிந்து தாக்குதலில் ஈடுபட்டாா். இதில் பேருந்தின் முன் பக்கக் கண்ணாடி சேதமடைந்தது. நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுதொடா்பாக பேருந்தின் நடத்துநரான சேலம் மாவட்டம், தா்மசெட்டிகாடு பகுதியைச் சோ்ந்த இ.செல்வராஜ் (56)திண்டுக்கல் நகா் தெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில், கல்வீச்சில் ஈடுபட்ட நாகல்நகா் சுற்றுத்திட்டுப் பகுதியைச் சோ்ந்த கு.மாரிமுத்து (35) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



