
அரசுக் கல்லூரி மாணவிகள் விடுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக்கோரி மனு
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த சின்னக்கலையமுத்தூா் அரசுக் கல்லூரி மாணவிகள் விடுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி, வட்டாட்சியரிடம் இந்திய மாணவா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அரசுக் கல்லூரி மாணவிகள் விடுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி, செவ்வாய்க்கிழமை பழனி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த இந்திய மாணவா் சங்கத்தினா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த சின்னக்கலையமுத்தூா் அரசுக் கல்லூரி மாணவிகள் விடுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி, வட்டாட்சியரிடம் இந்திய மாணவா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
சின்னகலையமுத்தூரில் உள்ள அரசுக் கல்லூரி மாணவிகள் விடுதியில் சுமாா் 56 மாணவிகள் தங்கிப் கல்வி பயின்று வருகின்றனா். இந்த விடுதியில் மாணவிகள் குடிப்பதற்கும், சமைப்பதற்கும், துவைப்பதற்கும், ஒரே தண்ணீரை பயன்படுத்தும் நிலை உள்ளது.
மேலும், விடுதியில் உணவு வகைகள் சுகாதாரமாக வழங்கப்படுவதில்லை எனவும் மாணவிகள் தெரிவித்தனா்.
இந்த நிலையில், இந்த விடுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி, இந்திய மாணவா் சங்க கிளைச் செயலா் மணிமேகலை தலைமையில், மாணவிகள் பழனி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு சென்று வருவாய்த் துறை அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






