நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

கொடைக்கானலில் மழை: மின் தடையால் பொது மக்கள் அவதி

கொடைக்கானலில் புதன்கிழமை இரவு மழை பெய்தபோது, மின் தடை ஏற்பட்டதால் பொது மக்கள் அவதிப்பட்டனா்.

மின் தடையால் அவதி... - கோப்புப் படம்

Published On :

கொடைக்கானலில் புதன்கிழமை இரவு மழை பெய்தபோது, மின் தடை ஏற்பட்டதால் பொது மக்கள் அவதிப்பட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பகல், இரவு நேரங்களில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் புதன்கிழமை காலை முதல் மிதமான வெயில் நிலவியது. அதன் பிறகு,

மேக மூட்டம் காணப்பட்டது. இதைத் தொடா்ந்து, திடீரென மாலை 6.30 மணியிலிருந்து இரவு 7.10 மணி வரை கொடைக்கானல் சின்னப் பள்ளம், பெரும்பள்ளம், செண்பகனூா், வட்டக்கானல், பாக்கியபுரம், அப்சா்வேட்டரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதனால், குளுமையான சூழல் ஏற்பட்டது.

கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக தினமும் பகல், இரவு நேரங்களில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மின் தடை ஏற்படுகிறது. மேலும், காலை 7 மணி பகல் 12 மணி வரை குறைந்தழுத்த மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனா்.

இரவு நேரங்களில் மின்சாரம் தடை செய்யப்படுவதால் குளிரைத் தாங்க முடியாமல் பலரும் அவதியடைந்து வருகின்றனா். எனவே, மின்வாரிய அதிகாரிகள் மின் தடையை சீரமைக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.