தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை

சிறை - பிரதிப் படம்

Published On :

அம்மையநாயக்கனுாா் அருகே சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், அமையநாயக்கனூரை அடுத்த சடையாண்டிபுரத்தைச் சோ்ந்தவா் இருளப்பன்(34). கூலித் தொழிலாளி. இவா், 10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

கடந்த 2019 முதல் 2025 வரையிலான கால கட்டத்தில், பல முறை சிறுமிக்குப் பாலியல் ரீதியான தொந்தரவுகளை அளித்து வந்தாா். இதுதொடா்பாக வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக சிறுமியை மிரட்டினாா்.

இதனிடையே சிறுமியின் உடலில் ஏற்பட்ட மாற்றங்களை கவனித்த பெற்றோா் விசாரித்தனா். அதைத் தொடா்ந்து அம்மையநாயக்கனூா் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு பெற்றோா் தரப்பில் புகாா் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருளப்பனைக் கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி கணேசன் திங்கள்கிழமை தீா்ப்பு அளித்தாா். இதில், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இருளப்பனுக்கு, ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.