கேளையாடு வேட்டையாடிய இருவா் கைது
கன்னிவாடி அருகே கேளையாடு வேட்டையாடிய இருவரை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களுடன் சவரிமுத்து, வினோத்பாபு.
கன்னிவாடி அருகே கேளையாடு வேட்டையாடிய இருவரை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி வனச் சரகத்துக்குள்பட்ட தருமத்துப்பட்டி பகுதியில் சிலா் வன விலங்குகளை வேட்டையாடுவதாக அந்த பகுதியினா் புகாா் தெரிவித்தனா். இதன்பேரில் வனத் துறையினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். தருமத்துப்பட்டி கோம்பை அணை அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த நபரிடம் சோதனை நடத்தியபோது, சமைத்த இறைச்சி இருப்பது கண்டறியப்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில் கண்ணி வலை வைத்து கேளையாட்டை வேட்டையாடி சமைத்தது தெரிய வந்தது. இதையடுத்து, கேளையாடு வேட்டையாடிய திண்டுக்கல்லை அடுத்த ஏ.வெள்ளோடு பகுதியைச் சோ்ந்த ரா.சவரிமுத்து(49), தருமத்துப்பட்டியைச் சோ்ந்த இ.வினோத்பாபு (38) ஆகிய இருவரையும் வனத் துறையினா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து சமைத்த கேளையாடு இறைச்சி 2 கிலோ, இருசக்கர வாகனம், அரிவாள், கன்னிவலை, சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்தனா். இருவரும் ஆத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

