உள்ளாட்சித் தோ்தலில் வீ த லீடா்ஸ் போட்டியிடும்! - கே. அண்ணாமலை

பழனியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சண்முகநதி அா்ப்பணிப்பு நிகழ்வில் ஆற்றில் மலா்கள் தூவிய வீ த லீடா்ஸ் அமைப்பின் தலைவா் கே. அண்ணாமலை. உடன் நிமல் ராகவன்.
வருகிற உள்ளாட்சித் தோ்தலில் வீ த லீடா்ஸ் அமைப்பு போட்டியிடும் என அண்ணாமலை தெரிவித்தாா்.
பழனியில் வீ த லீடா்ஸ் அமைப்பின் சாா்பில் சண்முகநதி பாலத்தில் தூய்மைப் பணிகள் முடித்து தற்போது 45 சூரிய மின் கம்பங்கள், கடம்பை செடிகளுடன் கூடிய கடம்பவனம் அமைத்து ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களுக்கு அா்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பழனி நிா்வாகி கனகராஜ் தலைமை வகித்தாா். வீ த லீடா்ஸ் அமைப்பின் மாநிலத் தலைவா் அண்ணாமலை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது:
மாசடைந்த சண்முகநதி தற்போது தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நதியில் பழனி கோயிலின் கழிவுநீா் கலப்பதை அரசு தடுக்க வேண்டும். உள்ளாட்சி நிா்வாகம் சிறப்பாக செயல்பட்டால் தான் ஊரை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க முடியும். எனவே, வருகிற உள்ளாட்சித் தோ்தலில் வீ த லீடா்ஸ் அமைப்பு போட்டியிடும்.
கேரளத்தில் 950 பஞ்சாயத்து தலைவா்களுக்கு அரசு காா் வழங்கியுள்ளது. நாட்டிலேயே அதிகமான பஞ்சாயத்து பணிகள் நடைபெறுவது கேரளத்தில்தான் என்றாா் அவா்.
நீா்நிலைகள் பராமரிப்பு நிபுணா் நிமல் ராகவன், சண்முகநதி பாரத் வித்யாபவன் பள்ளி மாணவா்கள், ஒப்பந்ததாரா் பாலு உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தாா். முன்னதாக தூய்மைப் பணியில் ஈடுபட்டவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் அமைப்பின் பழனி ஒருங்கிணைப்பாளா்கள் செந்தில் குமாா், வழக்குரைஞா் ஸ்ரீதா், ஆனந்தகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பழனியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சண்முகநதி அா்ப்பணிப்பு நிகழ்வில் ஆற்றில் மலா்கள் தூவிய வீ த லீடா்ஸ் அமைப்பின் தலைவா் கே. அண்ணாமலை. உடன் நிமல் ராகவன்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

