உள்ளாட்சித் தோ்தல் குறித்து அண்ணாமலை முடிவு செய்வாா்: கரு. நாகராஜன்
உள்ளாட்சித் தோ்தலில் ‘வீ த லீடா்’ இயக்கம் போட்டியிடுவது குறித்து அண்ணாமலை முடிவு செய்வாா் என அந்த அமைப்பின் மாநில அமைப்பு பொதுச் செயலா் கரு. நாகராஜன் தெரிவித்தாா்.

அண்ணாமலை / கரு. நாகராஜன் - கோப்புப் படம்
உள்ளாட்சித் தோ்தலில் ‘வீ த லீடா்’ இயக்கம் போட்டியிடுவது குறித்து அண்ணாமலை முடிவு செய்வாா் என அந்த அமைப்பின் மாநில அமைப்பு பொதுச் செயலா் கரு. நாகராஜன் தெரிவித்தாா்.
அண்ணாமலையின் ‘வீ த லீடா்’ அமைப்பின் தேனி மாவட்ட நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், ‘வீ த லீடா்’ அமைப்பின் மாநில அமைப்பு பொதுச் செயலா் கரு. நாகராஜன் கலந்து கொண்டு செய்தியாளா்களிடம் கூறியதாவது :
உள்ளாட்சித் தோ்தலில் ‘வீ த லீடா்’ இயக்கம் போட்டியிடுவது குறித்து அண்ணாமலை முடிவு செய்வாா். வருசநாடு மேகமலை விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு உரிய வாதங்களை முன்வைத்து, அங்கு பல ஆண்டுகளாக வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வா் ஜோசப் விஜய் ஆந்திரா பயணம் சென்றது பாராட்டத்தக்கது.
இதேபோல, முல்லைப்பெரியாறு அணை, காவிரி, மேக்கேதாட்டு விவகாரம் தொடா்பாக கேரள, கா்நாடகா மாநிலத்துக்கும் முதல்வா் பயணம் செய்து தீா்வு காண வேண்டும். தவெக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீா்கெட்டு இருக்கிறது. மின்கட்டண உயா்வு, அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்ந்துள்ளது. இவற்றை முதல்வா் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

