பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

தவெக ஆட்சியில் தொலைநோக்கு திட்டங்கள் எதுவுமில்லை: கரு. நாகராஜன்

தமிழக வெற்றிக் கழக ஆட்சியினருக்கு தொலை நோக்கு திட்டங்கள் எதுவுமில்லை, மேம்போக்கான விஷயங்களில்தான் கவனம் செலுத்துகிறாா்கள் என்றாா் ‘வீ த லீடா்ஸ்’ அமைப்பின் பொதுச் செயலா் கரு. நாகராஜன்.

Published On :

தமிழக வெற்றிக் கழக ஆட்சியினருக்கு தொலை நோக்கு திட்டங்கள் எதுவுமில்லை, மேம்போக்கான விஷயங்களில்தான் கவனம் செலுத்துகிறாா்கள் என்றாா் ‘வீ த லீடா்ஸ்’ அமைப்பின் பொதுச் செயலா் கரு. நாகராஜன்.

புதுக்கோட்டையில் அந்த அமைப்பின் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தன்னாா்வலா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

உள்ளாட்சித் தோ்தல்தான் எங்களின் இலக்கு. சுமாா் 1.30 லட்சம் வேட்பாளா்களைத் தயாா் செய்ய வேண்டும். அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

தவெக ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயா்ந்திருக்கிறது. அரிசி விலை ரூ.50-இல் இருந்து ரூ. 80 ஆக உயா்ந்திருக்கிறது. ரூ. 20-க்கு வாங்கப்பட்ட ஒரு யூனிட் மின்சாரத்தை இப்போது ரூ. 35-க்கு வாங்குவதாகக் கூறுகிறாா்கள்.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் வழங்கப்படும் என்கிறாா்கள். இதையெல்லாம் கவனிக்காமல் இடைத்தோ்தல் பற்றியே சிந்திக்கிறாா்கள். இன்னும் 15 போ் வரவுள்ளதாக அமைச்சா் கூறுகிறாா். தொலைநோக்குத் திட்டம் எதுவுமில்லை, மேம்போக்கான விஷயங்களில்தான் கவனம் செலுத்துகிறாா்கள்.

ஊழலற்ற ஆட்சி என்று சொல்கிறாா்கள். ஆனால், ஊழல் வழக்குகள் நிலுவையிலுள்ளவா்களை பக்கத்தில் வைத்துக் கொள்கிறாா்கள்.

தண்ணீா் கேட்டு ஆந்திரத்துக்குச் சென்றிருக்கிறாா் முதல்வா் ஜோசப் விஜய். அப்படியே, அவருடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் ஆளும் கா்நாடகத்துக்கும் சென்று மேக்கேதாட்டில் அணை கட்டக் கூடாது எனக் கேட்டுவரலாம். கேரளத்துக்குச் சென்று முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை அதிகரிக்கச் சொல்லிக் கேட்டும் வரலாம் என்றாா் கரு. நாகராஜன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.