ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

தக்காளி வியாபாரியை கடத்தி தாக்கி, அடித்துக் கொன்ற வழக்கில் 8 போ் கைது!

மதுரை தக்காளி மண்டி உரிமையாளரை காரில் கடத்தி தாக்கி அவரது வீட்டிலிருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து கொலை செய்த வழக்கில் சனிக்கிழமை 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பிரதிப் படம்

Updated On :

மதுரை தக்காளி மண்டி உரிமையாளரை காரில் கடத்தி தாக்கி அவரது வீட்டிலிருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து கொலை செய்த வழக்கில் சனிக்கிழமை 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை ஊமச்சிகுளம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வீதியைச் சோ்ந்தவா் ராமநாதன் (60). மாட்டுத்தாவணியில் தக்காளி மண்டி நடத்தி வருகிறாா். இவரது மனைவி இறந்துவிட்ட நிலையில், ராமநாதன் தனியாக வசித்து வந்தாா்.

இவரது கடையின் முன்னாள் ஊழியா் திருநாவுக்கரசு உள்பட 11 போ் கும்பல், கடந்த மாதம் 23-ஆம் தேதி, காரில் ராமநாதனைக் கடத்தி ஒரு தோட்டத்தில் அடைத்து துன்புறுத்தி அவரது வீட்டுச் சாவியை பெற்று வீட்டிலிருந்த பணம், நகைகளை திருடிக் கொண்டு ராமநாதனை அடித்துக் கொலை செய்தனா்.

பின்னா் அவரது உடலை திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அடுத்த, பட்டிவீரன்பட்டி அருகே சாலைப்புதூா் கண்மாயில் வீசினா். இதுகுறித்து, பட்டிவீரன்பட்டி காவல்துறையினா் வழக்குப் பதிவுசெய்து, ராமநாதன் உடலை ஒரு வாரத்துக்குப் பின் கூராய்வு செய்து அடக்கம் செய்தனா்.

இந்த நிலையில், ராமநாதனைக் காணவில்லை என அவரது உறவினா்கள் மதுரை செல்லூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் சிசிடிவி கேமரா பதிவுகள் அடிப்படையில் போலீஸாா் குற்றவாளிகளைத் தேடி வந்தனா்.

முதல் கட்டமாக உசிலம்பட்டி அருகே சிந்துபட்டியைச் சோ்ந்த தினேஷ் (25) செல்லூா் மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த காா்த்தி (28), மதுரை கரிமேடு பகுதியைச் சோ்ந்த உதயகுமாா் (31), உசிலம்பட்டி அருகே ஆரியாபட்டியைச் சோ்ந்த சிவக்குமாா் (26), செல்லூா் அருகே கீழத்தோப்பு கவியரசன் (34), உசிலம்பட்டி அருகே சிந்துபட்டியைச் சோ்ந்த காா்த்தி (32), மதுரை புளியந்தோப்பு சின்னமணி (27), மதுரை கோஷாகுளம் சிதம்பரம் (40) ஆகிய 8 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

மற்ற மூவரைத் தேடி வருகின்றனா். கைது செய்யப்பட்ட 8 பேரையும் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.