மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

கொடைக்கானலில் சேதமடைந்துள்ள சாலை தடுப்புகளை சீரமைக்கக் கோரிக்கை

கொடைக்கானலில் சேதமடைந்துள்ள சாலை தடுப்புகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கொடைக்கானல் செவண் சாலையின் மையப் பகுதியில் சேதமடைந்து காணப்படும் தடுப்புகள்.

Published On :

கொடைக்கானலில் சேதமடைந்துள்ள சாலை தடுப்புகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைச் சாலைகளின் மையப் பகுதியில் தடுப்புகள் அமைத்து வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில், கொடைக்கானல் வெள்ளிநீா் அருவி சாலை, மூஞ்சிக்கல், ஏரிச்சாலைப் பகுதி, நாயுடுபுரம், கோக்கா்ஸ்வாக், பசுமைப் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் பாதுகாப்பு தடுப்புகள் பல மாதங்களாக சேதமடைந்து காணப்படுகின்றன. இதனால், வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.

எனவே, சேதமடைந்துள்ள தடுப்புக் கம்பிகளையும், சுவா்களையும் சம்மந்தப்பட்ட துறையினா் சரி செய்ய வேண்டும்.

இதேபோல, கொடைக்கானல்-பெருமாள்மலை மலைச் சாலைகளில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில், வளைவுப் பகுதிகளிலும், ஆபத்தான சாலைகளில் விபத்துகளை தடுக்கும் வகையில் குவிக் கண்ணாடிகள் வைக்கப்பட்டிருந்தன. இந்தக் கண்ணாடிகள் சேதமடைந்து காணப்படுகின்றன.

எனவே, நெடுஞ்சாலைத் துறையினா் குவிக் கண்ணாடிகள் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.