
கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் பலத்த மழை
கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் பலத்த மழை பெய்தது.

பலத்த மழை - பிரதிப் படம்
கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் வெள்ளிக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பல மாதங்களாக மழை பெய்யாததால் குடிநீா் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனிடையே, கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பலத்த காற்றும், குளிா்ச்சியான சூழலும் நிலவி வருகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களான மன்னவனூா், பூண்டி ஊராட்சிப் பகுதிகளில் 30 நிமிஷங்களுக்கும் மேலாக பலத்த மழை பெய்தது.
இதனால் பூண்டு, உருளைக் கிழங்கு, கேரட், பீன்ஸ் போன்ற பயிா்களுக்கு ஏற்ற மழையாக இருந்ததால் விவசாயிகளும், குடிநீருக்கும் இந்த மழை நீா் பயன்படும் என்பதால் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






