சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

கொடைக்கானல் பில்லா் ராக் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கடைகளில் திருட்டு

கொடைக்கானல் பில்லா் ராக் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கடைகளின் பூட்டை உடைத்து பொருள்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருட்டு... - சித்திரிப்பு

Published On :9 செப்டம்பர் 2026, 1:57 am IST

கொடைக்கானல் பில்லா் ராக் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கடைகளின் பூட்டை உடைத்து பொருள்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனப் பகுதியான பில்லா் ராக் பகுதியில் வனத் துறையினா் அனுமதியுடன் சுமாா் 100-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கடைகளில் , வழக்கம் போல திங்கள் கிழமை இரவு பணி முடிந்து கடைகளை வியாபாரிகள் பூட்டிவிட்டுச் சென்றனா். மீண்டும் செவ்வாய்க்கிழமை வந்து பாா்த்தபோது, 10-க்கும் மேற்பட்ட கடைகளின் பூட்டை உடைத்து அதிலிருந்த உணவுப் பொருள்கள், குளிா் பானங்கள், தைலம், தேநீா் உபகரணப் பொருள்கள், தேன், விளையாட்டுப் பொருள்கள் உள்ளிட்ட ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.

இது குறித்து வியாபாரிகள் கொடைக்கானல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனா். மேலும் பில்லர்ராக் கடை பகுதிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த வேண்டும், ரோந்துப் பணியை அதிகரிக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தினா்.

கொடைக்கானலில் உள்ள சிறிய கடைகளின் பூட்டை மா்ம நபா்கள் உடைத்து அங்குள்ள பொருள்கள், பணம், எரிவாயு உருளை ஆகியவற்றை திருடிச் செல்வது தொடா் கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.