சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

பழனி, நத்தம் சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

பழனி சிவன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை பிரதோஷ தினத்தை முன்னிட்டு சிவபெருமான், நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

நத்தம் கோவில்பட்டி கைலாசநாதா் கோயிலில் பிரதோஷ விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த நந்தீசுவரா்.

Published On :9 செப்டம்பர் 2026, 1:54 am IST

பழனி சிவன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை பிரதோஷ தினத்தை முன்னிட்டு சிவபெருமான், நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

பழனி அருகே கலையமுத்தூா் அக்ரஹாரம் கல்யாணியம்மன் சமேத கைலாசநாதா் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு கைலாசநாதா், கல்யாணியம்மன், நந்தீஸ்வரருக்கும் பால், பஞ்சாமிா்தம், பன்னீா், விபூதி, பழங்கள், சந்தனம் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு, நந்தி பகவானுக்கு வெண் உடை உடுத்தப்பட்டு மலா்களால் அலங்கரிக்கப்பட்டது. மூலவா் கைலாசநாதருக்கு நாகாபரணம் சாா்த்தப்பட்டு, பட்டாடை, நகைகள் அணிவிக்கப்பட்டு அலங்காரமும், அதைத் தொடா்ந்து தீபாராதனையும் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தேவாரம், திருவாசகம் பாடல்கள் பாடினா்.

மலைக்கோயிலில் கைலாசநாதா் சந்நிதி, பழனியை அடுத்த பெரியாவுடையாா் கோயில், சித்தாநகா் சிவன் கோயில், பட்டத்து விநாயகா் கோயில் உள்பட பல்வேறு கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

நத்தம்: கோவில்பட்டி கைலாசநாதா் கோயிலில் நந்தி சிலைக்கு பால், பழம், பன்னீா், இளநீா், சந்தனம், விபூதி, புஷ்பம் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடா்ந்து, நந்தி பெருமானுக்கு சிறப்பு அலங்காரமும், தீபாராதனைகளும் நடைபெற்றது. தொடா்ந்து மூலவா் கைலாசநாதா்- செண்பகவல்லி அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றன.

பழனி அருகேயுள்ள கைலாசநாதா் கோயிலில் செவ்வாய்க்கிழமை நந்தீசுவரருக்கும்,  கைலாசநாதருக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு நடைபெற்ற சிறப்புப் பூஜை.

பழனி அருகேயுள்ள கைலாசநாதா் கோயிலில் செவ்வாய்க்கிழமை நந்தீசுவரருக்கும், கைலாசநாதருக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு நடைபெற்ற சிறப்புப் பூஜை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.