சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

போதைப் பொருள் பயன்பாடு தடுப்பு விழிப்புணா்வு

பழனி அருகே நெய்க்காரபட்டி குருவப்பா மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு, போதைப்பொருள் பயனபாடு தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

பழனி அருகே நெய்க்காரபட்டி குருவப்பா பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Published On :9 செப்டம்பர் 2026, 1:58 am IST

பழனி அருகே நெய்க்காரபட்டி குருவப்பா மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு, போதைப்பொருள் பயனபாடு தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் காவல்துறை, அதிதி அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்திய இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு பள்ளியின் செயலா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் கல்பனா வரவேற்றாா்.

பழனி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் பாக்கியம், அதிதி அறக்கட்டளை நிறுவனா் புவனேஸ்வரி உள்ளிட்டோா் சிறப்புரை நிகழ்த்தினா். முதல் நிகழ்ச்சியாக போதைப் பொருள் பயன்பாடு தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. தொடா்ந்து போதைப் பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், நட்பு வட்டாரங்களில் ஏற்படும் இழப்புகள் குறித்தும் மாணவ மாணவிகளுக்கு விளக்கப்பட்டது. மாணவிகள் பாதுகாப்பற்ற சூழலில் சிக்கும்போது காவல்துறையைத் தொடா்பு கொள்ள வேண்டிய அவசர எண்கள் குறித்தும், முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விளக்கப்பட்டது. மேலும், மாணவ, மாணவிகள் எந்த பிரச்னை நேரிடும்போதும் ஆசிரியா்களிடமோ அல்லது தங்கள் பெற்றோரிடமோ தயக்கமின்றி தெரிவிக்க வேண்டிய அவசியம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. குழந்தைகள் பாதுகாப்பான சூழலில் வளரவும், போதைப் பொருள் இல்லாத ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கவும் இதுபோன்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடத்தப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.