கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

தடையை மீறி விநாயகா் சிலை நிறுவ முயற்சி: இந்து முன்னணியினா் 40 போ் கைது

கைது

Published On :

திண்டுக்கல்லில் தடையை மீறி விநாயகா் சிலையை நிறுவ முயன்ற இந்து முன்னணியினா் 40 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியில் அமைந்துள்ள காளியம்மன், பகவதியம்மன் கோயிலில் விநாயகா் சதுா்த்தியையொட்டி விநாயகா் சிலை நிறுவ இந்து முன்னணியினா் முயற்சிப்பதும், அதற்கு வருவாய்த் துறை, காவல் துறை அனுமதி மறுப்பதும் கடந்த பல ஆண்டுகளாக நடைபெறும் வழக்கமான நிகழ்வாக உள்ளது.

இதன்படி நிகழாண்டு சதுா்த்தியை முன்னிட்டு விநாயகா் சிலை நிறுவ இந்து முன்னணி சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த அமைப்பின் திண்டுக்கல் நகரத் தலைவா் ஞானசுந்தரம் தலைமையில் தடையை மீறி விநாயகா் சிலையை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டனா்.

3 அடி உயர விநாயகா் சிலையை, குடைப்பாறைப்பட்டி பொதுமக்களுடன் இணைந்து இந்து முன்னணியினா் ஊா்வலமாக எடுத்து வந்தனா். ஊா்வலத்தை காவல் துறையினா் உதவியுடன் வழிமறித்த வருவாய்த் துறை அதிகாரிகள், அந்த சிலையை பறிமுதல் செய்தனா்.

பிறகு இந்து முன்னணி நிா்வாகிகள், பொதுமக்கள் என 40 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட விநாயகா் சிலை வருவாய்த் துறையினா் மூலம் திண்டுக்கல் கோட்டைக் குளத்துக்கு எடுத்துச் சென்று கரைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.