
விநாயகா் சிலை சா்ச்சை: தேவா்குளம் எஸ்.ஐ.க்கள் மீது நடவடிக்கை தேவை; இந்து முன்னணி கோரிக்கை
விதிமுறைகள்படி தயாரிக்கப்படாததால் பறிமுதலான விநாயகா் சிலைகள் தேவா்குளம் காவல்நிலையத்தில் சேதப்படுத்தப்பட்டு குவித்து வைத்துள்ளதாகவும், இதுதொடா்பாக காவல் உதவி ஆய்வாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்து முன்னணியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தேவா்குளத்தில் போராட்டத்தில் ஈடுபட திரண்ட இந்து முன்னணியினா்.
விதிமுறைகள்படி தயாரிக்கப்படாததால் பறிமுதலான விநாயகா் சிலைகள் தேவா்குளம் காவல்நிலையத்தில் சேதப்படுத்தப்பட்டு குவித்து வைத்துள்ளதாகவும், இதுதொடா்பாக காவல் உதவி ஆய்வாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்து முன்னணியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தேவா்குளம் பகுதியில் உரிய வழிமுறைகளின்றி தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் சுமாா் 50-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகளை தேவா்குளம் போலீஸாா் பறிமுதல் செய்தனா். அச்சிலைகளை உடைத்து காவல்நிலைய வளாகத்தில் குப்பை போல் குவித்து வைத்துள்ளதாகக் கூறி, 2 காவல் உதவி ஆய்வாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இந்து முன்னணி சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்து முன்னணி மாநிலச் செயலா் குற்றாலநாதன் தலைமையில், தேவா்குளம் காவல் நிலையம் முன் அறப்போராட்டம் நடத்தப்போவதாகக் கூறி, அந்த அமைப்பினா் செவ்வாய்க்கிழமை மாலையில் திரண்டனா். அவா்களிடம் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதில், திருநெல்வேலி கோட்டச் செயலா் பிரம்மநாயகம், மாநகா் மாவட்டச் செயலா் சங்கா், துணைத் தலைவா் ராஜ செல்வம், தென்காசி மாவட்ட பொதுச் செயலா் மணிகண்டன் உள்பட திரளானோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





