தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்இன்று 6 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கைஆசிய விளையாட்டுப் போட்டிகள்: இந்தியா்கள் தயாராக ரூ. 800 கோடி செலவுஇந்தியா - நியூஸிலாந்து தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அடுத்த மாதம் அமல்சிஆா்பிஎஃப் கோப்ரா பிரிவுக்கு முதல் பெண் ஐ.ஜி

பள்ளியில் மாணவா்கள், ஆசிரியா்களுக்கு பாராட்டு

பழனி அருகே புஷ்பத்தூா் ஸ்ரீவித்யா மந்திா் சிபிஎஸ்இ பள்ளியில் கடந்த கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கும், வழிநடத்திய ஆசிரியா்களுக்கும் பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

புஷ்பத்தூா் ஸ்ரீவித்யா மந்திா் பள்ளியில் 12 வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு திங்கள்கிழமை பரிசுகளை வழங்கிய திரைப்பட இயக்குனா் கரு.பழனியப்பன். உடன் பள்ளித் தாளாளா் வீராசாமிநாதன், செயலா் சச்சின் சாமிநாதன், இயக்குநா் காா்த்திகேயன், முதல்வா் வசந்தா உள்ளிட்டோா்.

Published On :

பழனி அருகே புஷ்பத்தூா் ஸ்ரீவித்யா மந்திா் சிபிஎஸ்இ பள்ளியில் கடந்த கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கும், வழிநடத்திய ஆசிரியா்களுக்கும் பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு பள்ளித் தாளாளா் வீராசாமிநாதன் தலைமை வகித்தாா். செயலா் சச்சின் சாமிநாதன், பொருளாளா் வேலுச்சாமி, இயக்குா் காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திரைப்பட இயக்குனரும், பேச்சாளருமான கரு.பழனியப்பன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, கடந்த கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கும், வழிநடத்திய ஆசிரியா்களுக்கும் ரொக்கப் பரிசுகளை வழங்கிப் பேசினாா்.

இந்த விழாவில் முதன்மை செயல் அலுவலா் இன்னாசிமுத்து, துணை முதல்வா் ஹேமலதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, பள்ளி முதல்வா் வசந்தா வரவேற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.