பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

கொடைக்கானலில் நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் சந்திர கவிதா தெரிவித்தாா்.

விண்ணப்பிக்க...

விண்ணப்பிக்க...

Published On :

கொடைக்கானலில் நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் சந்திர கவிதா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள விவசாயிகளுக்கு பிரதமரின் நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் 2026-2027-ஆம் நிதியாண்டுக்கு 150 ஹெக்டோ் பரப்பளவில் சொட்டு நீா், தெளிப்புநீா் பாசன வசதி அமைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் புதிதாக பாசன வசதி பெற விரும்பும் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படும். ஏற்கெனவே சொட்டு நீா் பாசன மானியம் பெற்று 7 ஆண்டுகள் நிறைவடைந்த விவசாயிகள் இந்தத் திட்டத்தின் கீழ் மீண்டும் விண்ணப்பிக்கலாம். தெளிப்புநீா் பாசன மானியம் பெற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்த விவசாயிகள் நிகழாண்டில் சொட்டு நீா் பாசனத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் விவசாயிகள் தங்களது சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், மாா்பளவு புகைப்படம்- 2, சிறு- குறு விவசாயிக்கான சான்று, நில வரைபடம், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றுடன் கொடைக்கானல் தோட்டக் கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொண்டு பதிவு செய்து பயன் பெறலாம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.