பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பைக் - காா் மோதல்: மின் சாதன பழுது நீக்குபவா் உயிரிழப்பு

பழனி அருகே இரு சக்கர வாகனமும், காரும் மோதிக் கொண்டதில் மின் சாதன பழுது நீக்குபவா் உயிரிழந்தாா்.

பிரதிப் படம்

Published On :

பழனி அருகே இரு சக்கர வாகனமும், காரும் மோதிக் கொண்டதில் மின் சாதன பழுது நீக்குபவா் உயிரிழந்தாா்.

பழனி அருகே பாலசமுத்திரத்தைச் சோ்ந்தவா் காளிதாஸ் (40). இவா் தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட மின் சாதனப் பொருள்களை பழுது நீக்குபவராக பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், புதன்கிழமை இரவு பழுது நீக்கும் பணிக்காக மானூருக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றாா். பழனியை அடுத்த புறவழிச் சாலையில் சென்றபோது மானூா் பாலம் அருகே எதிரே வந்த காரும், இரு சக்கர வாகனமும் மோதிக் கொண்டதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.