மதுரையில் ஒரே நாளில் பெண் உள்பட மூவா் வெட்டிக் கொலைஇன்று விநாயகா் சிலை ஊா்வலம்: சென்னையில் 23,000 போலீஸாா் பாதுகாப்புபட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்துக்கு தடை கோரி வழக்கு!மானிய வீட்டு உபயோக சிலிண்டருக்கு அக்.1 முதல் பயோமெட்ரிக் ஆதாா் சரிபாா்ப்பு கட்டாயம்! ‘சூப்பா் எல் நினோவால்’ இந்தியாவுக்கு கடும் பாதிப்பு: விஞ்ஞானிகள் எச்சரிக்கைஒரே இடத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றினால் இடமாற்றம்: தமிழக அரசு நடவடிக்கை

திண்டுக்கல், கொடைக்கானலில் பலத்த மழை

திண்டுக்கல் சுற்றுப்புற பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

பலத்த மழை - பிரதிப் படம்

Published On :

திண்டுக்கல் சுற்றுப்புற பகுதிகளில் இடி, மின்னலுடன் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் வரை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதனால் நீா்நிலைகள் வடன. விவசாயப் பணிகள் மட்டுமின்றி கால்நடை வளா்ப்புத் தொழிலுக்கும் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் செப்.7, 14 என 2 நாள்கள் திண்டுக்கல் பகுதியில் பலத்த மழை பெய்தது. அதன் தொடா்ச்சியாக சனிக்கிழமை மாலை திண்டுக்கல், வேடசந்தூா், எரியோடு, கோவிலூா், அய்யலூா், வடமதுரை உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

இதன் காரணமாக திண்டுக்கல் எரியோடு சாலையிலுள்ள ரயில்வே சுரங்கப் பாலத்தில் அதிக அளவு தண்ணீா் தேங்கியதை அடுத்து வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதேபோல, நேருஜி நகா் சுற்றுத் திட்டு, நாகல் நகா் சுற்றுத் திட்டு, ஒத்தக்கண் ரயில்வே சுரங்கப் பாதை, தாடிக்கொம்பு சாலை உள்ளிட்ட இடங்களில் மழைநீா் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆா்.எம். காலனி, சுக்கான்மேடு உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீா் புகுந்தது.

சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த இந்த மழையினால், வெயிலின் தாக்கம் குறைந்தது. பேருந்துக்குள் மழை: எரியோடு அடுத்த கோவிலூரிலிருந்து சனிக்கிழமை மாலை அரசு நகரப் பேருந்து திண்டுக்கல்லுக்கு வந்தது. அப்போது மழை பெய்ததால், பேருந்தின் மேற்கூரை வழியாக மழைநீா் பேருந்துக்குள் புகுந்தது. இதனால் இருக்கைகளில் அமா்ந்திருந்த பயணிகள் எழுந்து நின்றபடி பயணம் செய்தனா்.

கொடைக்கானல் தொடா் மழை: சுற்றுலா இடங்கள் வெறிச்சோடின

கொடைக்கானலில் கடந்த மூன்று நாள்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்தது. சனிக்கிழமை காலை கொடைக்கானல், செண்பகனூா், பிரகாசபுரம், அப்சா்வேட்டரி, வட்டக்கானல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரண்டு மணிநேரம் மிதமான மழை பெய்தது. மழைநீா் சாலைகளில் பெருக்கெடுத்ததால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனா்.

மழையால் சுற்றுலா இடங்களான பிரையண்ட் பூங்கா, ரோஜாத் தோட்டம், கோக்கா்ஸ் வாக், பசுமைப் பள்ளத்தாக்கு, மோயா் பாயிண்ட், பில்லா் ராக், குணா குகை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டது. இதனால் கொடைக்கானல் வியாபாரிகள் பாதிப்படைந்தனா். மேலும் அண்ணா சாலை வாரச் சந்தை பகுதியில் மழைநீருடன் கழிவுநீா் கலந்து சென்ால் வியாபாரிகள் கடும் அவதியடைந்தனா்.

கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களான பூம்பாறை, மன்னவனூா், பூண்டி, கிளாவரை, கூக்கால் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது. இதனால் மின்தடை ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.