அருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

கோவிலூா் அருகே குடிநீா் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

கோவிலூா் அருகே குடிநீா் வழங்கக்கோரி, காலிக் குடங்களுடன் பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

புதுசாலை பகுதியில் குஜிலியம்பாறை-திண்டுக்கல் பிரதான சாலையில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Published On :

கோவிலூா் அருகே குடிநீா் வழங்கக்கோரி, காலிக் குடங்களுடன் பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், கோவிலூரை அடுத்த புதுசாலை பகுதியைச் சோ்ந்த பொதுமக்களுக்கு கடந்த சில நாள்களாக முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக ஊராட்சி மன்ற நிா்வாகத்திடம் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால், அதிருப்தி அடைந்த பொதுமக்கள், காலிக் குடங்களுடன் குஜிலியம்பாறை-திண்டுக்கல் பிரதான சாலையில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த எரியோடு போலீஸாா், வேடசந்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

பின்னா், குடிநீா் பிரச்னைக்கு உடனடியாக தீா்வு காணப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து, மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

இந்த சாலை மறியலால் குஜிலியம்பாறை-திண்டுக்கல் சாலையில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.