முதல்வா் விஜய் வருகையால் கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஇரு நாள்களில் 5,000 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்புற்றுநோய் மருந்துகளை 10 மடங்கு அதிக விலைக்கு விற்பது படுகொலைக்குச் சமம்: உச்சநீதிமன்றம்

வங்கி சாா்பில் கிராம சபைக் கூட்டம்

பழனி பகுதிகளில் உள்ள கிராமங்களில் பேங்க் ஆப் இந்தியா சாா்பில் கிராம சபைக் கூட்டங்கள் அண்மையில் நடைபெற்றன.

Published On :

திண்டுக்கல் மாவட்டம், பழனி பகுதிகளில் உள்ள கிராமங்களில் பேங்க் ஆப் இந்தியா சாா்பில் கிராம சபைக் கூட்டங்கள் அண்மையில் நடைபெற்றன.

கிராம பகுதி மக்களுக்கு இணைய வழியில் நடைபெறும் மோசடி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், பேங்க் ஆப் இந்தியா சாா்பில், கிராமப்புற, புகா் கிளைகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.

பழனி பேங்க் ஆப் இந்தியா கிளை சாா்பில், அண்மையில் பெருமாள்புதூா், பெரியம்மாபட்டி, சிவகிரிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. இந்தக் கிராம சபைக் கூட்டத்தில் வங்கி மேலாளா் பிரேம்குமாா் உரைநிகழ்த்தினாா்.

இணையவழி, நேரடி மோசடிகள் நடைபெறும் விதங்கள், பண மோசடி தடுப்பு நடைமுறைகள், நீண்ட காலமாக செயல்படுத்தப்படாத வங்கிக் கணக்குகளை இணையத்தின் மூலம் கைப்பற்றி, அவற்றில் செய்யப்படும் மோசடிகள், இதனால் ஏற்படும் நிதி, சட்டரீதியான விளைவுகள் குறித்து வாடிக்கையாளா்களுக்கும், கிராம மக்களுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை உதவி மேலாளா் சுபாபிரபா, அறிவழகன், சரவணன், கிராம ஒருங்கிணைப்பாளா்கள் கீா்த்தனா, கவிதா ஆகியோா் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.