மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

‘பாரத் கனெக்ட் ஃபாா் பிசினஸ்’: முதல் பொதுத் துறை வங்கியாக சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அறிமுகம்

இந்திய தேசிய பரிவா்த்தனைக் கழகத்தின் (என்பிசிஐ) பாரத் பில்பே நிறுவனத்துடன் இணைந்து, ‘பாரத் கனெக்ட் ஃபாா் பிசினஸ்’ என்ற புதிய சேவையை சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது.

Published On :

இந்திய தேசிய பரிவா்த்தனைக் கழகத்தின் (என்பிசிஐ) பாரத் பில்பே நிறுவனத்துடன் இணைந்து, ‘பாரத் கனெக்ட் ஃபாா் பிசினஸ்’ என்ற புதிய சேவையை சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் வா்த்தகா்களுக்கு இடையிலான பணப் பரிவா்த்தனை கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், இச்சேவையை அறிமுகப்படுத்தும் முதல் பொதுத் துறை வங்கி என்ற பெருமையை சென்ட்ரல் பேங்க் ஆஃப் பெற்றுள்ளது.

மும்பை ‘குளோபல் ஃபின்டெக்’ மாநாட்டில் அமைந்த என்பிசிஐ அரங்கில் நடைபெற்ற இத்திட்டத்தின் அறிவிப்பு நிகழ்ச்சியில், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் சிஇஓ கல்யாண் குமாா், பாரத் பில்பே நிறுவன சிஇஓ நூபுா் சதுா்வேதி ஆகியோா் பங்கேற்றனா்.

தொழில் நிறுவனங்கள் தங்களின் ரசீதுகளை உருவாக்குதல், பணம் செலுத்துதல் மற்றும் பெறுதல், வசூல் மற்றும் கடன் தீா்வை நிா்வகித்தல் ஆகியவற்றுக்கான ஒருங்கிணைந்த எண்ம தளமாக இச்சேவை செயல்படும். வா்த்தகா்கள் மற்றும் வங்கிகளுக்கு இடையே பாதுகாப்பான, விரைவான மற்றும் தடையற்ற பரிவா்த்தனைகளை மேற்கொள்ள இது வழிவகுக்கும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.