நேபாள வெள்ளம்! பலி 1,290 ஆக உயர்வு; 10-வது நாள்களாக மீட்புப் பணிகள் தீவிரம்!நேபாள வெள்ளம்! 9 நாள்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட இருவர்!ஜிஎஸ்எல்வி-எஃப் 17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புகுடியரசு துணைத் தலைவா் நாளை சென்னை வருகைஉக்ரைன் போரில் அமைதி உடன்பாடு எட்ட வாய்ப்பு: ரஷிய அதிபா்

வங்கியில் வேலை வேண்டுமா..? பேங்க் ஆஃப் பரோடாவில் 2,482 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கிகளில் ஒன்று பேங்க் ஆஃப் பரோடா-ல் நிரப்பப்பட உள்ள 2,482 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக....

Bank of Baroda Recruitment 2026

பேங்க் ஆஃப் பரோடாவில் 2,482 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! - BOB

Published On :4 செப்டம்பர் 2026, 11:15 am IST

நாட்டின் முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்று பேங்க் ஆஃப் பரோடா. வதோதராவை தலைமை அலுவலமாகக் கொண்டு நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளை அலுவலகங்களுடன் செயல்பட்டு வரும் இந்த வங்கியில் காலியாக உள்ள 2,482 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து செப்.7 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்த விவரங்களை பார்ப்போம்...

பணி: உள்ளூர் வங்கி அதிகாரி (Local Bank Officer(LBO) JMG/S-I)

காலியிடங்கள்: 2482

மாநில வாரியாக காலியிடங்கள் விவரம்: தமிழ்நாடு - 132, ஆந்திரம் - 80, அருணாச்சலப் பிரதேசம் - 20, அஸ்ஸாம் - 40 கோவா - 21, குஜராத் - 1185, ஜம்மு-காஷ்மீர் - 15, கர்நாடகம்- 418, கேரளம்- 49, மகாராஷ்டிரம் - 218, மணிப்பூர் - 15, மேகாலயா - 15, மிசோரம் - 15, நாகாலாந்து - 15, ஒடிசா - 100, பஞ்சாப் - 34, சிக்கிம் - 10, தெலங்கானா - 50, திரிபுரா - 8, மேற்குவங்கம் - 42.

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாநில மொழியில் எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும். இன்சூரன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவில் சான்றிதழ் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட கமர்ஷியல் வங்கிகளில் குறைந்தது ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 1.8.2026 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி உச்ச வயதுவரம்பில் சலுகைள் வழங்கப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகைகள் வழங்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ.48,480 - ரூ.85,920 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, மல்டிபிள் ரவுண்ட்ஸ் டெஸ்ட், உளவியல் அளவீட்டுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு நடைபெறும் இடங்கள்: நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும். தமிழ்நாட்டில், சென்னை, மதுரை திருநெல்வேலி, சேலம், கோவை திருச்சி, வேலூர், விருதுநகர், தஞ்சாவூர், கடலூர், கன்னியாகுமரி, நாகர்கோவில் நாமக்கல் ஆகிய நகரங்களில் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.850, பெண்கள், எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு ரூ.175. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://bankofbaroda.bank.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 7.9.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

Bank of Baroda Recruitment 2026 for 2482 Local Bank Officer Posts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.