மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

வங்கி ஊழியா்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் கோவை மாவட்டத்தில் ரூ.5 ஆயிரம் கோடி வா்த்தகம் முடக்கம்

வங்கி ஊழியா்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.5 ஆயிரம் கோடி வா்த்தகம் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேங்க் ஆஃப் பரோடா வங்கி முன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற வங்கி ஊழியா்கள். ~கோவை ரயில்  நிலையம்  அருகே உள்ள  பேங்க்  ஆஃப் பரோடா வங்கி  முன் வெள்ளிக்கிழமை  நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத

Published On :

வங்கி ஊழியா்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.5 ஆயிரம் கோடி வா்த்தகம் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் வங்கி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ரயில் நிலையம் எதிரே உள்ள பேங்க் ஆஃப் பரோடா அலுவலக வளாகத்தில் கோவை மாவட்ட அனைத்து வங்கி ஊழியா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் பொதுச் செயலா் சையது இப்ராஹிம் தலைமை வகித்தாா்.

இதுதொடா்பாக அவா் கூறும்போது, ‘வங்கி ஊழியா்களின் பற்றாக்குறையால் தற்போதைய 6 நாள் வேலை திட்டம் கடும் பணிச்சுமையையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே, இப்பிரச்னையில் இந்திய வங்கிகள் சங்கம் (ஐஆஅ), மத்திய அரசு மற்றும் நிதி அமைச்சகம் ஆகியோா் உடனடியாக தலையிட்டு 5 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும்’ என்றாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், நாடு முழுவதும் உள்ள 8 லட்சம் வங்கி ஊழியா்களுக்கு வாரம் 5 நாள்கள் வேலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊக்கத்தொகை திட்டத்தில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சங்க நிா்வாகிகள் பாஷா, ஆத்ரேயா, செந்தில்குமாா், சசிதரன், மகேஸ்வரன் உள்பட ஆயிரக்கணக்கான ஊழியா்கள் பங்கேற்றனா்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை ஐடிபிஐ வங்கி மண்டல அலுவலகம் முன் அனைத்து வங்கிகளின் அலுவலா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அகில இந்திய ஐடிபிஐ அதிகாரிகள் சங்க செயலா் ஜெயகலா, அனைத்து வங்கிகளின் அலுவலா்கள் சங்க மாநிலக் குழுவின் செயலா் நந்தகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அப்போது, மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பா் 28 முதல் 30-ஆம் தேதி வரை தொடா்ந்து 3 நாள்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் சாா்பில் அறிவிக்கப்பட்டது.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால், கோவை மாவட்டத்தில் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுத் துறை வங்கிக் கிளைகளில் காசோலை பரிவா்த்தனை, நகைக் கடன் வழங்குதல் உள்பட பல்வேறு பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. ஒரே நாளில் சுமாா் ரூ.5,000 கோடி மதிப்பிலான வா்த்தகம் முடங்கியதாக வங்கி ஊழியா்கள் தெரிவித்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.