47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மதுரையில் மலேசிய கவுன்சிலர்கள்

மலேசிய நாட்டில் உள்ள சிப்பாங் மாநகராட்சிக் கவுன்சிலர்கள் 13 பேர் மதுரைக்கு சனிக்கிழமை வந்து சுற்றிப்பார்த்தனர்.

News image
Updated On :5 ஜனவரி 2013, 10:45 pm

தினமணி

 மலேசிய நாட்டில் உள்ள சிப்பாங் மாநகராட்சிக் கவுன்சிலர்கள் 13 பேர் மதுரைக்கு சனிக்கிழமை வந்து சுற்றிப்பார்த்தனர்.

  மலேசிய நாட்டில் உள்ளது கிலாங் மாநிலம். இங்குள்ள சிப்பாங் மாநகராட்சியில் தமிழ் கவுன்சிலர்களும் இடம் பெற்றுள்ளனர். அந்த மாநகராட்சியின் நகராண்மைக் கழக உறுப்பினர் எல்.சேகரன் தலைமையில் கவுன்சிóலர்கள் அஸ்மிஜாம், மணிவண்ணன், செல்வதுரை, ராஜூ, ஷாம், அருணகிரி, நலன், சந்தோஷ் சிங், ரவி, சத்தியா, தீபாகரன், ராமலிங்கம் உள்ளிட்ட 13 பேர் இந்தியாவில் உள்ள மாநகராட்சி நிர்வாக கட்டமைப்பை நேரில் பார்வையிட வந்துள்ளனர்.

 தமிழகத்துக்கு வந்த அவர்கள் சனிக்கிழமை காலை மதுரை வந்தனர். முதலில் அவர்கள் மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையப் பகுதியைச் சுற்றிப்பார்த்தனர். அங்கு மாநகராட்சி சார்பில் சுகாதாரம் பேணப்படுவது குறித்து நேரில் பார்வையிட்டனர். பின்னர், மாநகராட்சி தலைமை அலுவலகமான அறிஞர் அண்ணா மாளிகைக்கு வந்தனர்.

 அவர்களை மாநகராட்சி மக்கள் தொடர்பு அதிகாரி சித்திரைவேல் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர், மாநகராட்சி மேயர் வி.வி.ராஜன்செல்லப்பாவை சந்தித்தனர். அவரிடம் மாநகராட்சியின் புதிய திட்டங்களைக் கேட்டறிந்த மலேசிய கவுன்சிலர்கள், தங்கள் நாட்டிற்கு வருமாறு மேயரைக் கேட்டுக்கொண்டனர். அப்போது மேயர் கூறுகையில், மதுரையில் தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் வரும் பிப்ரவரியில் நடைபெற உள்ள மாமதுரை போற்றுதும் நிகழ்ச்சியில் பங்கேற்கவேண்டும் என மலேசிய கவுன்சிலர்களைக் கேட்டுக்கொண்டார்.

  மாநகராட்சி கூட்டரங்கு, ஆணையர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளைப் பார்வையிட்ட மலேசிய கவுன்சிலர்கள், பின்னர், மீனாட்சி திருக்கோயிலுக்குச் சென்று  தரிசனம் செய்தனர். அதன்பின் அவர்கள் கேரளம் செல்வதாகக் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.