மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம்: முதல்வர் விஜய்சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்வு!கனமழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!கனமழை: நீலகிரியில் 6 தாலுகாக்களில் இன்று (அக். 24) பள்ளிகளுக்கு விடுமுறை!தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்: இந்தியாபாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ராணுவ தலைமைத் தளபதி முனீா்!ரூ. 84,084 கோடிக்கு ‘சமுத்ர மந்தன்’ திட்டம்: கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

பட்டா வழங்கி 16 ஆண்டுகள் ஆகியும் நிலத்தை ஒப்படைக்கத் தாமதம்: ஆட்சியரிடம் புகார்

பட்டா வழங்கி 16 ஆண்டுகள் ஆகியும், நிலம் அளவீடு செய்து ஒப்படைக்க காலம் தாழ்த்துவதாக உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆதிதிராவிட மக்கள் புகார் தெரிவித்தனர்.

Updated On :

பட்டா வழங்கி 16 ஆண்டுகள் ஆகியும், நிலம் அளவீடு செய்து ஒப்படைக்க காலம் தாழ்த்துவதாக உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆதிதிராவிட மக்கள் புகார் தெரிவித்தனர்.

 மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள குறவகுடி கிராமத்தைச் சேர்ந்த ஆதிதிராவிட சமூகத்தினர் 68 பேருக்கு, 1999 இல் பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்படி நிலத்தின் உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளதால், நிலத்தை அளவீடு செய்து ஒப்படைக்க முடியவில்லை. இதுதொடர்பாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் பயனாளிகள், மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் குறைதீர் கூட்டத்தில் திங்கள்கிழமை மனு கொடுத்தனர்.

 அதன் விவரம்:

 அரசு பட்டா வழங்கி 16 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், இதுவரை நிலத்தை அளவீடு செய்து ஒப்படைப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் விவசாயம் செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இதுகுறித்து அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றும் கண்டுகொள்ளவில்லை. மேற்படி நிலத்தின் மீது வழக்கு நடப்பதாகக் கூறி தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகின்றனர். ஆகவே, பட்டா வழங்கப்பட்ட நிலத்தை அளவீடு செய்து ஒப்படைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.