
கொட்டாம்பட்டி அருகே கோயில் திருவிழாவையொட்டி இரு இடங்களில் வெள்ளிக்கிழமை தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
சேக்கிபட்டி முத்தாலம்மன்கோயில் மாசித் திருவிழா நடைபெற்றது. வியாழக்கிழமை இரவு அம்மன் எழுந்தருளினார். இதையடுத்து, வெள்ளிக்கிழமை ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்டனர்.
தகவலறிந்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். இருப்பினும், ஜல்லிக்கட்டு காளைகளை தொழுவிற்கு அழைத்து வராமல் அருகிலுள்ள தோப்புகளில் இருந்து அவிழ்த்துவிட்டனர்.
இதே போன்று கருங்காலக்குடி அருகிலுள்ள தேனங்குடிப்பட்டி கோயில் திருவிழாவையொட்டியும் தடையை மீறி ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. ஜல்லிக்கட்டு காளைகளைப் பிடிப்பதற்காக ஏராளமான மாடுபிடி வீரர்களும் வந்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





