தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரிசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

பிளஸ் 2 மொழிப் பாடத் தேர்வுக்கு 312 பேர் வரவில்லை

மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களை 312 பேர் எழுதவரவில்லை. மேலும், தமிழ், சமஸ்கிருத பாட வினாக்கள் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். தேர்வறைக்குள் காலணி அணிந்தும், இடுப்பு பெல்ட் அணிந்தும் செல்ல அனுமதிக்கவில்லை.

Updated On :24 ஜனவரி 2024, 10:12 pm IST

மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களை 312 பேர் எழுதவரவில்லை. மேலும், தமிழ், சமஸ்கிருத பாட வினாக்கள் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். தேர்வறைக்குள் காலணி அணிந்தும், இடுப்பு பெல்ட் அணிந்தும் செல்ல அனுமதிக்கவில்லை.

 தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. மதுரை மாவட்டத்தில் 92 மையங்களில் 38,683 மாணவ, மாணவியர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

  மதுரை மாவட்டத்தில் பள்ளிகள் மூலம் தேர்வெழுதியவர்களில் 238 பேர் தேர்வெழுத வரவில்லை. தனித் தேர்வர்களில் 69 பேரும், தட்கல் முறையில் விண்ணப்பித்தவர்களில் 5 பேரும் தேர்வெழுதவில்லை. மதுரை மாவட்டத்தில் தமிழ், சமஸ்கிருதம், ஹிந்தி மற்றும் பிரஞ்சு என அனைத்து மொழிப் பாடங்களிலும் 312 பேர் தேர்வு எழுத  வரவில்லை என மாவட்ட கல்வி அலுவலர்கள் தெரிவித்தனர்.

  ஆட்சியர் கண்காணிப்பு: நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தியாகராஜர் மாதிரி மேல்நிலைப் பள்ளி மற்றும் யா.ஒத்தக்கடை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் தேர்வு அறைகளை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் ஜோ.ஆஞ்சலோஇருதயசாமி ஆகியோர் பார்வையிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.